Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவரெல்லாம் எதுக்குப்பா டீம்ல”.. இந்திய அணியின் ப்ளேயிங் 11.. டிராவிட் மீது ஸ்ரீகாந்த் அதிருப்தி!

ட்ரினிடாட்: முதல் டி20 போட்டியின் போது ராகுல் டிராவிட் போட்ட திட்டத்தால் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் கோபம் அடைந்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 190 /6 ரன்களை சேர்க்க, பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 122 /8 ரன்களை எடுத்திருந்தது.

ப்ளேயிங் 11 ட்விஸ்ட்

ப்ளேயிங் 11 ட்விஸ்ட்

இந்த போட்டியில் இந்திய அணி அமைத்திருந்த ப்ளேயிங் 11 அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தது. ஏனென்றால் ஓப்பனிங்கில் ரோகித் சர்மாவுடன் - சூர்யகுமார் யாதவ் ஜோடியும், முதல் விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயரும் களமிறங்கியது தான். ஆனால் டிராவிட் போட்ட இந்த திட்டம் பலன் தரவில்லை என்று தான் கூற வேண்டும்.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு

ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு

தீபக் ஹூடா சிறப்பான ஃபார்மில் இருக்கும் நேரத்தில் ஸ்ரேயாஸுக்கு வாய்ப்பு தரப்பட்டது. அவரோ டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதே போல சூர்யகுமார் யாதவ் 24 ரன்களுக்கு நடையை கட்டினார். ப்ளேயிங் 11 வரிசை மாறியதால் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட்-ம் சமாளிக்க முடியாமல் வெளியேறினார். இதனால் டிராவிட் மீது தவறு என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஸ்ரீகாந்த் கடும் அதிருப்தி

ஸ்ரீகாந்த் கடும் அதிருப்தி

இந்நிலையில் டிராவிட் மீது முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அதிருப்தியடைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அணியில் தீபக் ஹூடா எங்கேப்பா? சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் சரி, ஒருநாள் கிரிக்கெட்டிலும் சரி சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் ப்ளேயிங் 11ல் இருந்திருக்க வேண்டும். அதற்கான காணம் தான் புரியவில்லை.

அவர் தேவையே இல்லை

அவர் தேவையே இல்லை

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஆல்ரவுண்டர்கள் தான் நமக்கு தேவை. பேட்டிங் ஆல்ரவுண்டர், பவுலிங் ஆல்ரவுண்டர் என எதுவாக இருந்தாலும் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முழு நேர பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு வழங்கியதை ஏற்க முடியவில்லை. தவறான முடிவு என அதிருப்தியடைந்துள்ளார்.

 புள்ளிவிவர ரெக்கார்ட்

புள்ளிவிவர ரெக்கார்ட்

தீபக் ஹூடா இதுவரை 4 இன்னிங்ஸ்களில் 205 ரன்களை அடித்துள்ளார். அவரின் சராசரி 68.33 ஆகும். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 351 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் சராசரி 35 ரன்கள் மட்டுமே. எனவே ஸ்ரேயாஸுக்கு மாற்றாக இனி ஹூடா களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Story first published: Saturday, July 30, 2022, 21:04 [IST]
Other articles published on Jul 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+