Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க பொங்கச்சோறும் வேண்டாம்.. பூசாரித்தனமும் வேண்டாம்..! ஆஸி.யில் செட்டிலாகும் ஸ்டார் வீரர்

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, ஆஸ்திரேலியாவில் குடியேறுகிறார்.

இலங்கை அணியின் நட்சத்திர பவுலர் மலிங்கா. 35 வயதான இவர், உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓய்வு தொடர்பான அறிவிப்பை எதுவும் அவர் வெளியிடவில்லை.

இந்நிலையில் வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி, வரும் 26ம் தேதி நடக்கிறது.

ஓய்வை அறிவிக்கிறார்

ஓய்வை அறிவிக்கிறார்

அந்த தொடரில் பங்கேற்கும் மலிங்கா, அதற்கு பிறகு தமது ஓய்வை அறிவிக்கிறார். பின்னர் அவர் இலங்கையில் இருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ளார். அதற்காக அங்கு வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்.

ஆஸி.யில் செட்டில்

ஆஸி.யில் செட்டில்

உலக கோப்பைக்கு பிறகு நேரடியாக ஆஸ்திரேலியா சென்ற அவர், விரைவில் இலங்கை திரும்புகிறார். ஓய்வுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளர் பணியை மலிங்கா மேற்கொள்ள இருப்பதாகவும், அது தொடர்பாக நண்பர்கள் சிலரிடம் கலந்து ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் தெரிகிறது.

பாராட்டு பெற்ற மலிங்கா

பாராட்டு பெற்ற மலிங்கா

நேர்த்தியான யார்க்கரால் எதிரணியை திணறடிக்கக் கூடிய அவர், உலக கோப்பையில் ஆஸி. வீரர் ஸ்டோய்னிசுக்கு ஸ்லோ பால் வீசுவது எப்படி என்று கற்றுக் கொடுத்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, மலிங்காவுக்கு பல பாராட்டுகளையும் பெற்று தந்தது.

தயாராக இருக்கிறேன்

தயாராக இருக்கிறேன்

இது குறித்து பேசிய மலிங்கா, எந்தவொரு வீரர் விரும்பினாலும், எல்லாவித டிப்ஸ்களையும் வழங்க தயாராக இருக்கிறேன். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு ஸ்லோ பால் வீசுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்தேன் என்றார்.

Story first published: Sunday, July 21, 2019, 13:08 [IST]
Other articles published on Jul 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+