Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி..!! கைய இப்படி வச்சுக்கோ…!! நேரா பந்துவீசு.. ஆங்.. சூப்பர்..!! அப்படித்தான்..!!

லண்டன்:இலங்கை அணியின் மாஸ் பந்துவீச்சாளரான மலிங்கா தனது பந்து வீச்சு ரகசியங்களை ஆஸ்திரேலியா வீரரிடம் பகிர்ந்து கொண்ட வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது.யாருக்கு கோப்பை என்ற கணிப்புகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தனது பந்து வீச்சு ரகசியங்களை ஆஸ்திரேலியா அணி வீரரிடம் பகிர்ந்து கொண்ட வீடியோ இணையத்தை கலக்கியிருக்கிறது.

பயிற்சி ஆட்டத்தில் தோல்வி

அதாவது, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நடந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை தோல்வி அடைந்தது. இந்த போட்டிக்கு பின்னர் மலிங்கா ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் ஸ்டோய்னிசுக்கு தனது பந்துவீச்சு குறித்த சில டிப்ஸ்களை அவருக்கு கொடுத்தார்.

பந்துவீசும் முறை

பந்துவீசும் முறை

இதுகுறித்து மலிங்கா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: ஐபிஎல் போட்டிகளில் நான் பந்துவீசிய விதம் குறித்து ஸ்டோய்னிஸ் தெரிந்து கொள்ள விரும்பினார்.

ஆலோசனை தர தயார்

ஆலோசனை தர தயார்

அதற்காக ஸ்டோய்னிஸ் என்னிடம் வந்து ஸ்லோ பால் வீசுவது எப்படி என்று கேட்டார். ஷார்ட் பார்மட் போட்டியில் விதவிதமான பந்துகளை வீசுவது முக்கியமானது. எந்தவொரு வீரர் விரும்பினாலும், எல்லாவித டிப்ஸ்களையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன்.

மலிங்கா மகிழ்ச்சி

மலிங்கா மகிழ்ச்சி

சூழ்நிலைகளை புரிந்து கொண்டு ஸ்லோ பால்களை வீசுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்தேன். அவருடன் இதை பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. இதன் மூலம் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்றார்.

யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்

யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்

கிரிக்கெட் உலகில் யார்க்கர் என்றாலே வக்கார் யூனிசுக்கு பிறகு சட்டென்று ரசிகர்களின் நினைவுக்கு வருவது லசித் மலிங்காதான். 35 வயதாகும் அவர் உலக கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.

கோப்பைக்கு காரணம்

கோப்பைக்கு காரணம்

வயது மற்றும் உடற்தகுதி பிரச்சனை ஆகியவற்றால் மலிங்காவால் சிறப்பாக பந்துவீச முடியவில்லை என்ற விமர்சனம் அப்படியே இருக்கிறது. ஆனாலும், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் 16 விக்கெட்டுக்கள் கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் மலிங்கா.

Story first published: Wednesday, May 29, 2019, 12:38 [IST]
Other articles published on May 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+