
நல்ல தொடக்கம்
வில் யங், டேரல் மிட்செல் ஜோடி பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பெரிய ஸ்கோரை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் யங் சமிகா கருணரத்னே பந்துவீச்சில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் டாம் லாத்தம் 5 ரன்களில் வெளியேற, டேரல் மிட்செலுடன் ஜோடி சேர்ந்த கிளன் பில்ப்ஸ் மீண்டும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

274 ரன்கள்
டேரல் மிட்செல் 47 ரன்களில் பெவிலியன் திரும்பினர். சிறப்பாக விளையாடிய கிளன் பில்ப்ஸ் 39 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இறுதியில் நியூசிலாந்தின் கீழ்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா 49 ரன்கள் எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 49.3 ஓவரில் 274 ரன்கள் எடுத்தது.

அபார பந்துவீச்சு
275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி வீரர்கள் களமிறங்கினர். நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆக்கோரஷமாக செயல்பட்டு, கடும் நெருக்கடி கொடுத்தனர். இந்த பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை வீரர்கள் விட்டா போதும் டா சாமி என்று பெவிலயன் திரும்பினர். நிசாங்கா 9 ரன்களிலும், நுவனிந்து பெர்னான்டோ 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, குசேல் மெண்டீஸ் 16 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆனார்.

76 ரன்களுக்கு ஆல்அவுட்
அசலங்கா 9 ரன்களிலும், கேப்டன் ஷனகா டக் அவுட்டாகியும் வெளியேற, அதிகபட்சமாக மேத்தீயூஸ் மட்டும் 18 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 19.5 ஓவரில் 76 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் நியூசிலாந்து எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை எடுத்த குறைந்த பட்ச ஸ்கோராகும். ஒட்டுமொத்தமாக இது இலங்கை அணியின் 5வது குறைந்தபட்ச ஸ்கோராகும். நியூசிலாந்து வீரர் ஹென்சி செப்லி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications











