Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டி20 உலகக்கோப்பை.. இலங்கை, வங்கதேசத்துக்கு சிக்கல்.. இந்தியா, பாக். ஆப்கன் நேரடி தகுதி

துபாய் : ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் 2020இல் நடைபெற உள்ளது. அதில் எட்டு நாடுகளின் கிரிக்கெட் அணிகள் நேரடியாக தகுதி பெறும்.

கூடுதலாக நான்கு அணிகள் தகுதிப் போட்டிகளின் மூலம் தேர்வு செய்யப்படும். இந்த முறை இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளன.

தகுதிச் சுற்று போட்டிகள்

தகுதிச் சுற்று போட்டிகள்

2019இல் டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் எட்டு அணிகள் பங்கேற்கும். டி20 தரவரிசையில் 2018இன் முடிவில் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக 2020 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.

வாய்ப்பை இழந்த அணிகள்

வாய்ப்பை இழந்த அணிகள்

முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்றும் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்த அணிகள் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகும். இதில் வங்கதேசம் ஒருமுறை கூட டி20 உலகக்கோப்பை அரையிறுதி வரை தகுதி பெற்றதில்லை.

பின்தங்கிய இலங்கை

பின்தங்கிய இலங்கை

இலங்கை அணியோ இதுவரை மூன்று முறை உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்றுள்ளது. 2014இல் கோப்பையையும் வென்ற அணியாகும். எனினும், கடந்த சில வருடங்களாக இலங்கை அணி டி20 போட்டிகளில் பின்தங்கி உள்ள காரணத்தால் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தை மட்டுமே பெற்றுள்ளது.

தகுதி சுற்றில் வங்கதேசம்

தகுதி சுற்றில் வங்கதேசம்

வங்கதேசம் தரவரிசையில் பத்தாவது இடத்தில் உள்ளது. அதனால், இலங்கை, வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் தகுதி சுற்றுப் போட்டிகளில் ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதே சமயம் தரவரிசையில் எட்டாவது இடத்தை பிடித்த ஆப்கானிஸ்தான் அணி, நேரடியாக 2020 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆப்கன் கிரிக்கெட் அசத்தல்

ஆப்கன் கிரிக்கெட் அசத்தல்

ஆப்கன் கிரிக்கெட் அணி தன் வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. சமீப காலங்களில் அந்த அணி டி20 போட்டிகளில் கலக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தகுதி பெறும் எட்டு அணிகள்

தகுதி பெறும் எட்டு அணிகள்

2௦20 டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் எட்டு அணிகள் - பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான்.

Story first published: Wednesday, January 2, 2019, 12:44 [IST]
Other articles published on Jan 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+