
சந்திமால் அபாரம்
பெர்னான்டோ அரை சதமும், கேப்டன் கருணரத்தினே 40 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். குசேல் மெண்டிஸ் எதிர்பாராத விதமாக மூன்று ரன்களில் ரன் அவுட் ஆனார். தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய மேத்தியூஸ் 106 பந்துகளை எதிர்கொண்டு 42 ரன்கள் எடுத்தார். இதன் பின்னர் நட்சத்திர வீரர் தினேஷ் சந்திமால் 80 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

டக் அவுட்
தனஞ்செயா 33 ரன்கள் எடுக்க , விக்கெட் கீப்பர் டெக்வெல்லா 51 ரன்கள் எடுக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. கடந்த டெஸ்ட்டில் சதம் விளாசிய ஷபிக் டக் அவுட்டாக, பாபர் அசாம் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

தனஞ்செய்யா சதம்
இறுதியில் சல்மான் 62 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 231 ரன்கள் எடுத்தார். 137 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்சில் தனஞ்செய்யா சதம் விளாசி அசத்தினார். அவருக்கு கருணரத்னே 61 ரன்கள் சேர்த்து ஆதரவு வழங்கினார். இதனால் இலங்கை அணி 2வத இன்னிங்சில் 360 ரன்கள் எடுத்தது.
Recommended Video

பரபரப்பான கட்டம்
508 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 5வது நாள் ஆட்டத்தை ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் என்ற ஸ்கோருடன் தொடங்கியது. போட்டி டிரா ஆகி விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாபர் அசாம் அபாரமாக விளையாடி 81 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்ததும், பாகிஸ்தான் அணி 176 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில், மேலும் 85 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய 7 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.


Click it and Unblock the Notifications











