Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீடியோ- இலங்கை தேசிய கீதத்தின் போது நடந்த சோகம்.. வெயிலில் மயங்கி விழுந்த சிறுவன்..காப்பாற்றிய வீரர்

புனே : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று புனேவில் நடைபெற்ற 30 வது லீக் ஆட்டத்தில் இலங்கையும் ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இலங்கை அணையின் தொடக்க வீரர் கருணரத்னே 15 ரன்களும், நிஷாங்கா 46 ரன்களும், கேப்டன் குசல் மெண்டிஸ் 39 ரன்களும் சமர விக்ரமா 36 ரன்களும் எடுத்தனர்.

Srilanka captain Kusal mendis saved the fainted kid during national anthem

எனினும் எந்த ஒரு வீரரும் தாங்கள் எடுத்த ஸ்கோரை அரை சதமாகவோ சதமாகவோ மாற்றவில்லை. இதன் காரணமாக இலங்கை அணி 49.3 ஓவரில் 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களும் இழந்தது. இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு நாட்டின் தேசிய கீதம் வாசிக்கப்படுவது வழக்கம். அப்போது இரண்டு அணி வீரர்களும் வரிசையாக நிற்பார்கள்.

அவர்களுக்கு முன்பாக சிறுவர்கள் நிற்க வைக்கப்படுவார்கள். இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் தேசிய கீதம் மிகவும் நீண்ட நேரம் வாசிக்கப்படும். இரண்டு நிமிடங்கள் 54 வினாடிகள் வரை இலங்கை அணியின் தேசிய கீதம் ஓடும். இது மிக நீண்ட தேசிய கீதங்களில் ஒன்றாகும். அப்போது இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் முன் நிற்க வைக்கப்பட்டு இருந்த சிறுவன் ஒருவர் வெயிலின் தாக்கம் காரணமாக மயங்கி விழுந்தார்.

எனினும் தேசிய கீதம் ஓடிக்கொண்டிருந்தாலும் சிறுவன் மயங்கி விழுவதை கண்ட இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் உடனடியாக அந்த சிறுவனை பிடித்து கீழே விழாமல் பார்த்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக அந்த சிறுவனை அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டீஸ், செயலை பலரும் பாராட்டினாலும் சிலர் இலங்கை நாட்டின் தேசிய கீதம் மிகவும் நீளமாக இருக்கிறது என்பதை குறிப்பிட்டு கிண்டலும் செய்தனர். ஒவ்வொரு போட்டிக்கும் இதுபோன்ற தேசிய கீதம் தேவைதானா இல்லை அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு மட்டும் இதேபோல் தேசிய கீதத்தை வைக்கலாமே ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Monday, October 30, 2023, 21:11 [IST]
Other articles published on Oct 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+