Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா வீசிய அந்த பந்து எப்படிங்க அவுட் ஆகும்.. இந்தியாவை பழிசுமத்தும் இலங்கை ரசிகர்கள்.. உண்மை என்ன?

கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வருவதை மற்ற நாட்டு ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தங்களது நாட்டு அணி வீரர்கள் மோசமாக விளையாடி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத வெளிநாட்டு ரசிகர்கள் இந்தியாவை முடிந்தவரை கேலி செய்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா பெறும் வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தால் பல சர்ச்சைகளை வேண்டுமென்றே கிளம்பி வருகிறார்கள். எப்படி கவுண்டமணி ஒரு கல்யாண வீட்டிற்கு சென்று சாப்பாட்டில் எப்படிடா இவ்வளவு பெரிய கல் வந்தது என்று கேட்டு வம்பு இழுப்பாரோ?

Srilanka cricket fans accuses DRS for india win over jadeja bowling vs SA

அதேபோல் இந்தியா பெரும் வெற்றிக்கு ஒவ்வொன்றுக்கும் தேவையில்லாமல் கேள்வி கேட்டு சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அண்டை நாடான பாகிஸ்தான் ரசிகர்கள் ஆரம்பம் முதலில் இந்தியாவின் வெற்றியை கேள்வி கேட்டு வரும் நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் இலங்கை ரசிகர்களும் சேர்ந்து விட்டார்கள் என்பது தான் கொடுமை.

இலங்கை அணி தொடர் தோல்வியால் துவண்டு வரும் நிலையில் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ரசிகர்கள் இந்தியா பெரும் வெற்றிக்கு கேள்வி கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் நேற்றைய ஆட்டத்தில் ஜடேஜா வீசிய பந்து எதிர்கொண்ட கிளாசன் எல்பிடபிள்யு ஆனார். ஆனால் அதற்கு நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார்.

இதனை அடுத்து மூன்றாம் நடுவர் உதவியை ரோகித் சர்மா நாடினார். அப்போது பந்து திரும்பி ஸ்டெம்பை பதம் பார்த்தது தெரியவந்தது. இதனை அடுத்து அதற்கு அவுட் வழங்கப்பட்டது. ஆனால் இலங்கை ரசிகர்கள் பந்து திரும்பவே இல்லை என்றும் அது ஸ்டெம்பை மிஸ் செய்யும் அளவுக்கு செல்வதாக குறை கூறி வருகின்றனர்.

இலங்கை ரசிகர்களின் இந்த கூற்றுக்கு காரணம் டிஆர்எஸ் எப்படி இயங்கும் என்ற அடிப்படை அறிவு இல்லாததுதான். ஏனென்றால் பந்து காலில் பட்ட இடத்திலிருந்து தான் நீல நிறக் கோடில் பந்து ஸ்டெம்பை அடிக்குமா அடிக்காதா என்று கணிக்கப்படும். ஆனால் இலங்கை ரசிகர்கள் பந்து குத்தி வேற திசை தான் செல்லும் என்றும் அது பேட்ஸ்மேனை நோக்கி போகாது என்றும் சிறு குழந்தைகள் போல் பேசி வருகிறார்கள்.

Story first published: Monday, November 6, 2023, 15:52 [IST]
Other articles published on Nov 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+