சூதாட்டாக்காரருடன் இலங்கை வீரருக்குத் தொடர்பு-ஐசிசி கண்காணிக்கிறது.

சம்பந்தப்பட்ட வீரர் குறித்து கேப்டன் சங்கக்காராவிடம் சக வீரர்களே கூறி உஷார்படுத்தியுள்ளனராம். சம்பந்தப்பட்ட வீரர் அடிக்கடி இரவு விருந்துகளுக்குப் போகிறாராம். அங்கு அந்த புக்கியை சந்திக்கிறாராம். இதுகுறித்து சங்கக்காராவிடம் சக வீரர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சங்கக்காரா, ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட வீரரிடம் இலங்கை போலீஸாரும் விசாரணை நடத்தியுள்ளனர். இருப்பினும் அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லையாம்.
இந்த விஷயத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் படு ரகசியமாக வைத்துள்ளது.
சர்ச்சையில் சிக்கியுள்ள வீரர் தற்போது ஐசிசியின் தீவிர கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின்போதே ஐசிசிக்கு சந்தேகம் வந்துள்ளது. அன்று முதலே அவர் கண்காணிப்பில் இருக்கிறாராம். இருப்பினும் அந்த வீரரை கையும் களவுமாக பிடிக்கும் சந்தர்ப்பம் இன்னும் கைகூடவில்லை என்று தெரிகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications