தடை பெற்ற பிறகும் 2024 ஆம் ஆண்டில் விளையாடும் இலங்கை.. இந்தியா, இங்கிலாந்து போன்ற அணிகளுடன் மோதல்
மும்பை : இலங்கை அரசின் தலையீடு இருப்பதாக கூறி அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருந்தது. ஐசிசி உலக கோப்பையில் இலங்கை அணி மோசமான செயல்பாட்டை பெற்றது.
மேலும் அதற்கு முன்பு நடந்த ஆசிய கோப்பை தொடரிலும் இலங்கை பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அரசு கலைத்த நிலையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது எனக்கூறி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி தடை விதித்திருந்தது.

இதனால் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை விளையாடுமா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி வழக்கம்போல் இருதரப்பு தொடர்களில் விளையாட ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இதை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி 2024 ஆம் ஆண்டு விளையாட போகும் தொடர் குறித்து அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன்படி இலங்கை அணி சொந்த மண்ணில் ஜிம்பாப்வே உடன் 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஜனவரி மாதம் விளையாட உள்ளது.அதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் ,3 ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் கொண்ட தொடரில் இலங்கை விளையாடுகிறது.இதனை தொடர்ந்து வங்கதேசத்துக்கு சென்று ஒரு நாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணி
ஜூலை மாதம் தங்களது சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் இலங்கை விளையாடுகிறது.இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து உடன் இலங்கை விளையாட உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் தலைமை செயல் அதிகாரி ஆஸ்லி டி சில்வா அடுத்த ஆண்டு பல விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியில் கொண்ட தொடரில் இலங்கை அணி விளையாட உள்ளது. இதன் மூலம் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் நிறைய வாய்ப்புகளும் பொழுதுபோக்கும் கிடைக்கும் என்று தாம் நம்புவதாக கூறியுள்ளார். இலங்கை அணி அடுத்த ஆண்டு மட்டும் 52 சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, November 29, 2023, 20:09 [IST]
Other articles published on Nov 29, 2023


Click it and Unblock the Notifications