இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் மீது ஃபிக்சிங் புகார்.. விசாரணைக்கு ஐசிசி உத்தரவு
கொழும்பு : இந்தியாவுக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தொடரை வென்று இலங்கை அணி சாதனை படைத்தது. இதன் மூலம் இலங்கை ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வரும் நிலையில் அவர்கள் மனதை கலங்க வைக்கும் விதமாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் சூதாட்டத் புகாரில் சிக்கி இருக்கிறார். இது குறித்து ஐசிசி விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறது. அவர் யார் என்று தற்போது பார்க்கலாம். இலங்கை அணிக்காக ஐந்து ஒருநாள் மற்றும் ஐந்து டெஸ்ட் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடிய சுழற் பந்துவீச்சாளர் பிரவீன் ஜெயவீக்கிமா.

25 வயதான இவர் 2021 ஆம் ஆண்டு இலங்கை பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றார். அப்போது அவரிடம் சூதாட்டத்தில் ஈடுபடுமாறு புக்கிகள் அவரை தொடர்பு கொண்டு இருக்கின்றனர். ஆனால் இது குறித்து புகார் தெரிவிக்காமல் ஜெயவிக்கிரமா தமக்கு வந்து மெசேஜ்களையும் இவர் அனுப்பிய மெசேஜ்களையும் அழித்து இருக்கிறார்.
இது தற்போது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து ஜெயவிக்கிரமா மீது விசாரணை நடத்த ஐசிசி உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், சூதாட்டத்தில் ஈடுபடும்படி யாராவது அணுகினால் 14 நாட்களுக்குள் உடனடியாக ஐசிசி யின் ஊழல் தடுப்பு பிரிவில் வீரர்கள் புகார் அளிக்க வேண்டும்.
அப்படி செய்யவில்லை என்றால் வீரர்கள் அந்த சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கருதப்படுவார்கள். இதே போன்று விசாரணைக்கு ஒத்துழைக்காமல், தமக்கு வந்த குறுஞ்செய்திகளை அழித்து விசாரணையை தொய்வு படுத்திய குற்றத்திற்காகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஜெயவிக்கிரமா மீதான விசாரணைக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ள ஐசிசி இரு அமைப்பும் இணைந்து ஜெயவிக்கிரமா தொடர்பு விசாரணை நடத்தும் என்று கூறி இருக்கிறது.
இந்த விசாரணையில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, உறுதியானால் ஜெயவீரமா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயவிக்கிரமா எந்த போட்டியிலும் இலங்கை அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications