பில்லி சூனியம் வச்சும் அதிக தோல்வியில் இலங்கை சாதனை
லாகூர்: பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி டி-20 போட்டியிலும் தோல்வியடைந்து, தான் விரும்பாத புதிய சாதனையை இலங்கை கிரிக்கெட் அணி புரிந்துள்ளது. ஒரு ஆண்டில் அதிகப் போட்டிகளில் தோல்வி என்ற சாதனையை இலங்கை சொந்தமாக்கி கொண்டுள்ளது.
இந்த ஆண்டில் அதிகம் சொதப்பிய அணிக்கான விருது கொடுத்தால், போட்டியே இல்லாமல் இலங்கை அணிக்கு தான் கிடைக்கும். அந்த அளவுக்கு படுமோசமாக விளையாடி வருகிறது. அடுத்த மாதம் இந்தியாவுக்கு வர உள்ள இலங்கை அணி, பாகிஸ்தானில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டது.
முதலில் விளையாடிய 2 டெஸ்ட்களிலும் வென்று, டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது. ஆஹா அசத்தறாங்கய்யா என்று கூறியபோது, யார் கண் பட்டதோ, அதன்பிறகு விளையாடிய 5 ஒருதினப் போட்டிகளிலும் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது. முதல் இரண்டு டி-20 போட்டிகளில் தோற்ற நிலையில் நேற்று லாகூரில் நடந்த மூன்றாவது போட்டியிலும் இலங்கை அணிக்கு தோல்வியே கிடைத்தது.

அதிகத் தோல்வியில் புதிய சாதனை
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வென்றதற்கு, பில்லி, சூனியம் செய்ததே காரணம் என்று, இலங்கையைச் சேர்ந்த பிரபல பெண் மந்திரவாதி கங்கா கொய்சா பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.

அதிக போட்டிகளில் தோல்வி
ஆனாலும், இந்த ஆண்டில் அதிகப் போட்டிகளில் தோல்வி என்ற புதிய சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது. டெஸ்ட், ஒருதினப் போட்டி, டி-20 என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து, இதுவரை 34 போட்டிகளில் இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளது.

ஜிம்பாப்வே சாதனை முறியடிப்பு
ஒரு ஆண்டில் அதிகப் போட்டிகளில் தோல்வி என்று 32 போட்டிகளில் தோல்வியடைந்திருந்த ஜிம்பாப்வேயின் சாதனையை இலங்கை முறியடித்துள்ளது.

6 தோல்வி 4 வெற்றி
இலங்கை அணி இந்தாண்டில் 10 டெஸ்ட்களில் விளையாடியுள்ளது. அதில் 6ல் தோல்வி, 4ல் வெற்றி பெற்றுள்ளது. 26 ஒருதினப் போட்டிகளில் 4 மட்டுமே வென்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு ஏற்படவில்லை. 21 போட்டிகளில் இலங்கை தோல்வி அடைந்துள்ளது. மொத்தம் விளையாடிய 12, டி-20 போட்டிகளில் 7ல் தோல்வி, 5ல் வெற்றி கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications