ஆசிய கோப்பை: வாழ்வா சாவா நிலையில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது இலங்கை
அபுதாபி: ஆசிய கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி தனது முதலாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியிடம் 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே இலங்கை அணி அரையிறுதி போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பாவது மீதமிருக்கும்.

ஆப்கானிஸ்தான்,இலங்கை போட்டி குறித்த ஒரு சிறு அலசல் இதோ.
இலங்கை அணி இது வரை ஆப்கானிஸ்தான் அணியுடன் இரண்டு முறை மோதியுள்ளது. இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியே வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணியை பொறுத்தவரை அந்த அணியில் மலிங்காவை தவிர வேறு ஒருவரும் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. இலங்கை அணியின் பீல்டிங் மற்றும் பேட்டிங் மோசமான நிலையில் உள்ளது. எனவே இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லா களமிறக்கப்படலாம். அகிலா தனஞ்செயா மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது இலங்கை அணிக்கு வலு சேர்க்கும். மேத்யூஸ் மற்றும் திசரா பெரேரா தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடினால் இலங்கை அணியினால் ஆசியா கோப்பை தொடரில் தொடர முடியும்.
ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கெதிரான தொடரை வென்று பலமாக உள்ளது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் அஹமத் ஷஹாட்,நம்பர் ஒன் ஒருநாள் பந்துவீச்சாளர் ரஷீத் கான் மற்றும் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் இலங்கை அணிக்கு பெரும் சவால் அளிப்பார்கள். மேலும் அனுபவ வீரர் முகமத் நபி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கை கொடுப்பார்.
ஆசிய கோப்பை போட்டிகளில் வெற்றிபெற ஆப்கானிஸ்தான் அணியும், ஆப்கான் அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க இலங்கை அணியும் கடுமையாக போராடும்.
Story first published: Monday, September 17, 2018, 10:43 [IST]
Other articles published on Sep 17, 2018


Click it and Unblock the Notifications