Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறப்பான பந்து வீச்சையடுத்து, பேட்டிங்கிலும் இலங்கை டாப்.. பரபரப்பு கட்டத்தில் கொல்கத்தா டெஸ்ட்!

கொல்கத்தா: போகிற போக்கை பார்த்தால் முதல் இன்னிங்சில் இலங்கை அணி அதிகப்படியான ரன்கள் முன்னிலை வகித்துவிடும் என்ற கிலியில் உள்ளனர் இந்திய ரசிகர்கள்.

மழையால் அடிக்கடி தடை பட்ட கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்தியா 172 ரன்களில் ஆல்-அவுட்டானது.

ஆறுதலாக புஜாரா மட்டுமே அரை சதம் விளாசினார். கோஹ்லி டக்அவுட்டானார். மற்ற முன்னணி வீரர்களும் ஏமாற்றினர். பின்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறிது ரன் சேர்த்து மானம் காத்தனர்.

ஸ்விங் ஆன பந்துகள்

ஸ்விங் ஆன பந்துகள்

பிட்சில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால் பந்து அதிக அளவுக்கு ஸ்விங் ஆனதுதான் பேட்ஸ்மேன்களால் ரன் குவிக்க முடியாததற்கு காரணம். ஆனால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் அதிரடியாக ஆடி வருகிறது.

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

3வது நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 45.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இது ஓரளவுக்கு நல்ல ரன் ரேட்தான். லகிரு திருமனே மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் தலா அரை சதம் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். தினேஷ் சண்டிமால் மற்றும் டிக்வெல்லா முறையே 13 மற்றும் 14 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

பிட்ச் மாறிவிட்டது

பிட்ச் மாறிவிட்டது

இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடும்போது இருந்த பிட்ச் நிலை இப்போது மாறிவிட்டது. பேட்டிங்கிற்கு வசதியாக பிட்ச் உள்ளதால் இலங்கை அதை பயனப்டுத்தி வருகிறது.

சவால்

சவால்

இந்த நிலை தொடர்ந்தால் இலங்கை அணி எளிதாக 300 ரன்களை கடந்துவிடும். கொல்கத்தா பிட்சில் கடைசி இன்னிங்ஸ் ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு சிரமமாக இருக்கும். எனவே நாளை மதியத்திற்குள் தங்கள் இன்னிங்சை முடிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு இலங்கை வேகமாக ரன் குவித்து வருகிறது. எனவே இந்திய அணிக்கு 2வது இன்னிங்சில் சவால் காத்திருக்கிறது.

Story first published: Saturday, November 18, 2017, 16:56 [IST]
Other articles published on Nov 18, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+