Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொழும்பு டெஸ்ட் போட்டி-யுவராஜ் சிங்கை கிண்டலடித்த 3 சிங்கள ரசிகர்கள் கைது

Yuvraj Singh
கொழும்பு: கொழும்பு டெஸ்ட் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை வாட்டர் பாய் என்று கூறி கிண்டலடித்த 3 சிங்கள ரசிகர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. கொழும்பில் தற்போது 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியில் யுவராஜ் சிங் ஆடவில்லை. மாறாக 12வது வீரராக வைக்கப்பட்டுள்ளார்.

முதல் நாள் ஆட்டமான நேற்று யுவராஜ் சிங் தேநீர் இடைவேளையின்போது வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்களை எடுத்துச் சென்றார். இதைப் பார்த்து சிங்கள ரசிகர்கள் வாட்டர் பாய் என்று கூறி யுவராஜ் சிங்கை கேலிசெய்தனர்.

இதனால் கோபமடைந்த யுவராஜ் சிங், தன்னைக் கேலி செய்த ரசிகர்களைப் பார்த்து கை விரலை நீட்டி எச்சரிக்கை விடுத்து விட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து இந்திய அணி நிர்வாகம் சார்பில் கொழும்பு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி 3 ரசிகர்களைப் பிடித்துள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:40 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+