வாழ்வா? சாவா? கட்டத்தில் இலங்கை.. இன்று யுஏஇ அணியுடன் மோதல்.. பெரிய வெற்றி பெற வேண்டிய கட்டாயம்
ஜீலாங் : 2022 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இன்று வாழ்வா சாவா என்ற கட்டத்தில் யுஏஇ அணியை எதிர்கொள்கிறது.
குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, யுஏஇ அணிகள் விளையாடுகின்றன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணியே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணி, கத்துக்குட்டி அணியான நமிபியாவுடன் 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இலங்கைக்கு ஆபத்து
இதன் மூலம் புள்ளி பட்டியலில் இலங்கை அணியின் ரன் ரேட் மைனஸ் 2க்கு கீழ் சரிந்து கடைசி இடத்தில் உள்ளது. இதனால் எஞ்சிய 2 போட்டியில் இலங்கை பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். இல்லையேனில் இலங்கை அணி, முதல் சுற்றிலேயே தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும்.

ரன் ரேட் சிக்கல்
இன்றைய ஆட்டத்தில் மற்றொரு கத்துக்குட்டி அணியான யுஏஇ அணியை இலங்கை எதிர்கொள்கிறது இலங்கை பலம் வாய்ந்த அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்கள் யுஏஇ அணியை குறைத்து மதிப்பிட்டால், மீண்டும் அதிர்ச்சி தோல்வி கிடைக்கலாம். இன்றைய ஆட்டத்தில் யுஏஇ அணியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே ரன் ரேட் இலங்கை அணிக்கு அதிகரிக்கும்.

யுஏஇ முக்கிய வீரர்
நெதர்லாந்துக்கு எதிராக யுஏஇ அணி பவுலர்கள் 111 ரன்களை எளிதாக எட்டவிட வில்லை. யுஏஇ அணியின் ஜூனைத் சித்திக் அபாரமாக பந்துவீசி வருகிறார். பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 5 விக்கெட் மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இலங்கை அணி அவரை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.

கேப்டன் ஷனாகா கருத்து
இன்றைய போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணி கேப்டன் ஷனாகா, தங்களுடைய பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் கவனத்துடன் நேர்மறையான எண்ணத்துடன் விளையாட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், பந்துவீச்சாளர்கள் யாக்கர்களை சரியாக வீச தவறிவிட்டதாக குறை கூறினார். இதனிடையே, தற்போது நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நமிபியா வென்றால் அது இலங்கைக்கு சாதகமாக இருக்கும். ஒரு வேலை நெதர்லாந்து வென்றால், அமு இலங்கையின் வாய்ப்புக்கு கேடாக அமையும்.


Click it and Unblock the Notifications