ரூ.45 கோடியை விட்டுக்கொடுக்கனுமா.. ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர்.. தடாலடி முடிவெடுத்த இலங்கை வாரியம்
இலங்கை: ஆசியக்கோப்பை தொடரை என்ன ஆனாலும் நடத்தப்போவதாக இலங்கை வாரியம் உறுதிபட கூறியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசிய நாடுகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ம் தேதி வரை நடத்துவதாக முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

நீடிக்கும் குழப்பம்
ஆனால் இந்த தொடர் எங்கு நடைபெறவுள்ளது என்பதில் தான் குழப்பம் நீடித்து வருகிறது. நடப்பாண்டு இலங்கை தான் தொகுத்து வழங்க வேண்டும். ஆனால் அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் மாற்றங்களால், அங்கு தொடர் நடைபெறுமா என்பதில் சிக்கல் உள்ளது. ஆசிய கோப்பை தொடர் அமீரகத்திற்கு கொண்டு செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

இலங்கை முடிவு
இந்நிலையில் இலங்கை பிடிவாதமாக உள்ளது. இதுகுறித்து பேசியுள்ள இலங்கை வாரிய செயலாளர் மோகன் டி சில்வா, ஆசிய கோப்பையை வேறு நாட்டிற்கு கொண்டு செல்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அட்த்ததாக ஆஸ்திரேலிய தொடர் இலங்கையில் நடக்கிறது. இதனை பொறுத்து ஆசிய கோப்பையின் முடிவும் எடுக்கப்படவுள்ளது.

எவ்வளவு நஷ்டம்
தொடர்ந்து பேசிய செயல் அதிகாரி, ஆசிய கோப்பையை தவறவிட்டால், சுமார் ரூ.45 கோடி வரை வருமான இழப்பீடு ஏற்படும். தற்போது நாங்கள் நிதி நெருக்கடியில் உள்ளோம். இந்த சூழலில் இப்படிபட்ட தொடரை கைவிட நினைக்க மாட்டோம். எனவே எப்படியாவது ஆசிய கோப்பையை நடத்தி முடித்துவிட வேண்டும் என உறுதியாக இருக்கிறோம் எனக்கூறியுள்ளார்.

வருமானம் எப்படி வரும்
எந்த நாடு தொடரை தொகுத்து வழங்குகிறதோ, அந்நாட்டிற்கு தனியாக தொகை ஒதுக்கி தரப்படும். மைதானத்தில் வரும் டிக்கெட் வருமானம் அனைத்தும் இலங்கை வாரியத்திற்கே செல்லும். இதுமட்டுமின்றி, மைதானத்தில் விளம்பரத்திற்காக வரும் வருமானங்கள் அனைத்தும் இலங்கை வாரியத்திற்கே செல்லும். இதனால் தான் அவ்வளவு முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications