For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பை - இலங்கை அபார வெற்றி.. யுஏஇ அணியை புரட்டி போட்டது.. ஆனாலும் சிக்கல் தீரவில்லை

ஜீலாங் : 2022 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் யுஏஇ அணியை புரட்டி போட்டு இலங்கை அபார வெற்றி பெற்றது.

வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இலங்கை அணி இன்று களமிறங்கியது. டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் , பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இலங்கை வீரர்கள் விளையாடினர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

தொடக்க வீரர் நிசாங்கா, அதிரடியாக விளையாடி 60 பந்துகளை எதிர்கொண்டு 74 ரன்களை விளாசினார். இதே போன்று தனஞ்செய்யா சில்வா 33 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.குசேல் மெண்டிஸ் 18 ரன்களில் வெளியேற இலங்கை அணி 117 ரன்களுக்கு 3 விக்கெட் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.அப்போது ஆட்டத்தின் 15வது ஓவரை யுஏஇ அணியில் விளையாடும் மெய்யப்பன் இலங்கை அணியின் இன்னிங்சையே திருப்பி போட்டார்.

ஹாட்ரிக் சாதனை

ஹாட்ரிக் சாதனை

முதலில் 15 ஓவரின் 4வது பந்தில் ஐபிஎல் வீரர் ராஜபக்சாவின் விக்கெட்டை மெய்யப்பன் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து அடுத்த பந்தில் அசலாங்காவை டக் அவுட்டாக்கிய மெய்யப்பன், கடைசி பந்தில் இலங்கை கேப்டன் ஷனாகாவை போல்ட் ஆக்கினார். இதன் மூலம் 117 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்து இலங்கை தடுமாறியது. 20 முடிவில் இலங்கை 152 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தடுமாறியது.

73 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

73 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யுஏஇ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. இலங்கை அணியின் பநதுவீச்சை எதிர்கொள்ள முடியாமல் யுஏஇ வீரர்கள் திணறி, அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக அந்த அணியின் அப்சல் கான் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, யுஏஇ அணி 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இலங்கை வீரர்கள் ஹசரங்கா, சமீரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கைக்கு தீராத சிக்கல்

இலங்கைக்கு தீராத சிக்கல்

79 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி, தற்போது புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய யுஏஇ அணி தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. ஆனால் இலங்கை அணிக்கு இந்த வெற்றி போதாது, தற்போது அந்த அணியின் ரன் ரேட் 0.60 என்ற அளவில் உள்ளது. இது நமீபியா அணியை விட குறைவாகும். எப்படியும் நமீபியா அணி கடைசி ஆட்டத்தில் யுஏஇ அணியை வென்றுவிடும். இதனால் இலங்கை அணி , நமீபியா அணியின் ரன் ரேட்டை விட அதிகமாகும் வகையில் நெதர்லாந்தை வீழ்த்தினால் மட்டுமே இலங்கை அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.

Story first published: Tuesday, October 18, 2022, 17:38 [IST]
Other articles published on Oct 18, 2022
English summary
Srilanka registered massive win against UAE in t20 world cup டி20 உலககோப்பை - இலங்கை அபார வெற்றி.. யுஏஇ அணியை புரட்டி போட்டது.. ஆனாலும் சிக்கல் தீரவில்லை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+