Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: இலங்கையின் ஒரே நம்பிக்கையும் "ஸ்வாஹா".. டாப் மோஸ்ட் வீரர் விலகல்? - அடப்பாவமே!

கொழும்பு: இந்திய தொடருக்கான இலங்கை அணியில் இருந்து சீனியர் வீரர் திசாரா ஃபெரேரா காயம் காரணமாக விலகுவதாக தெரிகிறது. சோனமுத்தா போச்சா!!

இலங்கையில் சுற்றுப்பயணம் இந்திய 'ஏ' அணி, அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

விராட் கோலி தலைமையிலான மெயின் அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால், இந்திய 20 வீரர்கள் கொண்ட 'ஏ' அணியை ஷிகர் தவான் தலைமையில் இலங்கைக்கு அனுப்பியது பிசிசிஐ.

 மாற்றப்பட்ட தேதிகள்

மாற்றப்பட்ட தேதிகள்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே, ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதாக இருந்தது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறுவதாய் இருந்தது. ஆனால், இலங்கை அணியில் அதன் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் அந்த அணியின் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகிய இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.

 தள்ளி வைக்கப்பட்ட தொடர்

தள்ளி வைக்கப்பட்ட தொடர்

அதாவது, ஜுலை 13ம் தேதி தொடங்கவிருந்த ஒருநாள் போட்டிகள், ஜுலை 18ம் தேதிக்கு மாற்றப்பட்டது. கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு தொடர் அப்படியே தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, முதல் ஒருநாள் போட்டி ஜுலை 18ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜுலை 20ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜுலை 23ம் தேதியும் நடைபெறுகிறது. அதேபோல், முதல் டி20 போட்டி ஜுலை 25ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜுலை 27ம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜுலை 29ம் தேதியும் நடைபெறும் என்று புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டன.

 வீரர்கள் பட்டியல்

வீரர்கள் பட்டியல்

இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

 காயத்தால் விலகல்

காயத்தால் விலகல்

இத்தொடருக்கான இலங்கை அணியில் குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகிய மூன்று முக்கிய வீரர்கள், இங்கிலாந்தில் பயோ-பபுளை மீறியதற்காக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸும் சம்பள பிரச்சனை காரணமாக இத்தொடரில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில், இன்னொரு சீனியர் வீரரான திசாரா ஃபெரேராவும் இப்போது இத்தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தில் விளையாடிய போது, பெரேராவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் இன்னமும் குணமடையாமல் உள்ளது.

Recommended Video

IND vs SL: India's Uncapped Players photoshoot! BCCI Tweets | OneIndia Tamil
 ஓண்ணே ஒன்னு, கண்ணே கண்ணு

ஓண்ணே ஒன்னு, கண்ணே கண்ணு

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "மருத்துவ ஊழியர்கள் ஃபெரேராவுக்கு ஊசி செலுத்தியுள்ளனர். எனவே அவர் நேற்று மற்றும் இன்றும் அணியுடன் பயிற்சி செய்யவில்லை. நாளை தான் அவரது உடல்தகுதி குறித்து முடிவு செய்யப்படும். ஆனால், இப்போது அவரது உடல்நிலை சரியில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். ஓண்ணே ஒன்னு, கண்ணே கண்ணு என்று இருந்த சீனியர் வீரர் திசாரா ஃபெரேராவும் இந்திய தொடரில் இருந்து விலகும் நிலைமை ஏற்பட்டிருப்பதால் இலங்கை பாடு மேலும் திண்டாட்டமாகியுள்ளது.

Story first published: Thursday, July 15, 2021, 18:17 [IST]
Other articles published on Jul 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+