Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடப்பு சாம்பியன் ஆஸி.யை நாக் அவுட் செய்யுமா இலங்கை.. 158 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை

பெர்த் : டி20 உலககோப்பையில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், இரண்டாவது போட்டியில் வெல்லும் முனைப்புடன் இலங்கை அணியை எதிர்கொண்டது.

பெர்த் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய குசால் மெண்டிஸ் 5 ரன்னில் ஆட்டமிழக்க, இலங்கை அணி முதல் விக்கெட்டை 6 ரன்களில் இழந்தது.

Srilanka set 158 runs as target for Australia

இதனையடுத்து நிசாங்கா மற்றும் தனஞ்செய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தனஞ்செய சில்வா 26 ரன்களில் ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடிய நிசாங்கா 40 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜபக்சா 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அணியை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் காபாற்றுவார் என எதிர்பார்த்த கேப்டன் ஷனாகா 3 ரன்னில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஹசரங்காவும் ஒரு ரன்னில் வெளியேறினார். இந்த நிலையில், அசலங்காவும்,கருணரத்னேவும் ஜோடி சேர்த்து அதிரடியாக ஆட முயற்சித்தனர்.

அசலங்கா தமக்கு கிடைத்த வாய்ப்புகளை பெவுண்டரியாக மாற்றினார். இந்த நிலையில் கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 20 ரன்களை இலங்கை அணி சேர்த்தது. இதன் மூலம் 137 ரன்களிலிருந்து 157 ரன்கள் என்ற ஸ்கோரை இலங்கை அணி எடுத்தது. இந்தப் போட்டியில் வார்னேவில் ஃபில்டிங் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

Story first published: Tuesday, October 25, 2022, 19:21 [IST]
Other articles published on Oct 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+