Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேட்சில் அசத்திய இந்திய வீரர்கள்.. இலங்கை வீரர்கள் சிக்சர் மழை.. இன்று செம சம்பவம் இருக்கு!

தர்மசாலா: இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 183 ரன்களை குவித்தது.

3 போட்டிகள் கொண்ட இந்தப் போட்டியில், இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளதால் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இலங்கை இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது.

குளிர்ந்த சூழல் நிலவியதால் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

புவனேஸ்வர் குமார்

புவனேஸ்வர் குமார்

ஆட்டம் தொடங்கியதும் புவனேஸ்வர் குமார் பந்தை லாவமாக ஸ்விங் செய்தார். இதனால் இலங்கை வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். இதனால் புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே இலங்கை அணியால் அடிக்க முடிந்தது.இதே போன்று பும்ராவும் தனது வழக்கமான அனல் பறக்கும் பந்துவீச்சை வீசினார். பும்ரா வீசிய யாக்கரில் கிட்டதட்ட விக்கெட் விழுந்தது. ஆனால் எல்.பி.டபிள்யூ லைனில் பந்து ஜஸ்ட் மிஸ் ஆனதால் இலங்கை வீரர் குனதிலக்கா தப்பித்தார். 2வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே இலங்கை வீரர்கள் சேர்த்தனர்.

ரோகித் தவறு

ரோகித் தவறு

இதே போன்று புவனேஸ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரில் இலங்கை அணி 6 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பும்ரா வீசிய அடுத்த ஓவரிலும் யாக்கர் மழை பொழிய இலங்கை அணி அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே அடித்தது. ஆனால் அடுத்த ஓவரை புவனேஸ்வர் குமாருக்கு தராமல் ரோகித் சர்மா ஹர்சல் பட்டேலுக்கு தந்தார். அதன் பிறகு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ரோகித் ஓவர் தந்தார். குறிப்பாக ஜடேஜா வீசிய 8வது ஓவரில் குனதிலகா சிக்ஸ், பவுண்டரி, சிக்ஸ என ரன்களை குவிக்க, அடுத்த பந்தையும் அடிக்க முற்பட்டு 38 ரன்களில் அவுட்டானார்.

அசத்தல் கேட்ச்

அசத்தல் கேட்ச்

கடந்த சில போட்டிகளில் கேட்ச்களை பிடிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் திணறினர். ஆனால் இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரோகித் சர்மா ஆகியோர் அசத்தலான கேட்ச்களை பிடித்து அசத்தினார். இதனால் குனதிலகா, சந்திமால், காமில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அதிரடி

இலங்கை அதிரடி

இருப்பினும் இலங்கை அணியின் தொடக்க வீரர் நிசாங்கா இந்தியாவின் பந்துவீச்சை பிரிச்சி மெய்ந்தார். அவருக்கு கேப்டன் சனாகாவும் துணை நிற்க, இலங்கை அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்துக்கு உயர்ந்தது. நிசாங்கா 53 பந்துகளில் 75 ரன்கள் விளாசி புவி பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் சனாகா 19 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்சர்கள் அடங்கும். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 183 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 5 ஓவரில் இலங்கை அணி 80 ரன்கள் சேர்த்தது.

Story first published: Saturday, February 26, 2022, 20:54 [IST]
Other articles published on Feb 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+