ஆசிய கோப்பை போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு..
கொழும்பு : ஆசியா கண்டத்தை சேர்ந்த ஆறு அணிகள் பங்குபெறும் ஆசிய கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்ஸில் தொடங்க இருக்கின்றன.
இந்தியா,இலங்கை,பங்களாதேஷ்,பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் 6ஆவதாக பங்குபெறும் அணிக்காக தகுதி போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

லசித் மலிங்கா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். 35 வயதான மலிங்கா ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ஐசிசி தடையில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்த சண்டிமால் அணியில் இடம்பிடித்துள்ளார். தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தடை விதிக்கப்பட்ட தனுஷ்கா குணத்திலகா அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி விவரம்
ஏஞ்சலோ மேத்யூஸ்(கேப்டன்), குசால் பெரேரா,குசால் மெண்டிஸ்,உப்புல் தரங்கா,தினேஷ் சந்திமால்,தனுஷ்கா குணத்திலகா,திசாரா பெரேரா,தசுன் ஷனாகா,தனஞ்செய டி சில்வா,அகிலா தனஞ்செயா,திலருவான் பெரேரா,அமிலா அபோன்சா,காசுன் ரஜிதா,சுரங்கா லக்மல்,துஷ்மந்தா சமீரா,லசித் மலிங்கா
இலங்கை அணி சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேத்யூஸ் தலைமையிலான அணி ஆசியா கோப்பை போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்ற அணிகளுக்கு சவால் அளிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
Story first published: Sunday, September 2, 2018, 10:01 [IST]
Other articles published on Sep 2, 2018


Click it and Unblock the Notifications