கொழும்பு : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனைத்து அணியினரும் தங்களுடைய வீரர்களை அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ள நிலையில் கடைசி நேரத்தில் இலங்கை அணி தற்போது 15 வீரர்களை உலககோப்பை தொடர்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
வீரர்கள் சிலர் காயமடைந்து இருந்ததால் அவர்கள் மீண்டும் வருவார்களா என்று காத்திருந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டிருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி கேப்டனாக சனக்காவே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வேகப்பந்துவீச்சாளர் தில்சான் மதுசங்கா, லகிரு குமாரா ஆகியோர் உலகக் கோப்பை தொடர்கான அணியின் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதேபோன்று பிரமோத் மதுசன், பினோரா பெர்னான்டோ, சமீகா கருனரத்னே ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதேபோன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் சமீரா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆர் சி பி அணியின் இடம்பெற்ற ஹசாரங்கா உலகக் கோப்பை அணியில் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
இந்த நிலையில் உலககோப்பை தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஏதேனும் வீரருக்கு காயம் ஏற்பட்டால் ஹசரங்கா முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் சேர்க்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுபோன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் காயம் அடைந்த சிஎஸ்கே வீரர் மகிசா தீக்சனா முழு உடல் தகுதி எட்டியதால் அவருக்கு உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று தோனியின் செல்லப் பிள்ளையான சிஎஸ்கே மதீசா பதிராணா முதல் முறையாக உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இதே போன்று குசல் பெரேரா விக்கெட் கீப்பராக செயல்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதைத்தவிர ஆசிய கோப்பையில் விளையாடிய அனைத்து வீரர்களும் உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள். இலங்கை அணி வரும் 29ஆம் தேதி முதல் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தையும் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது.
உலககோப்பைக்கான இலங்கை அணி : ஷனாகா (கேப்டன்), குசல் மெண்டீஸ் (துணை கேப்டன்), குசல் பெரேரா, நிசாங்கா, திமுத் கருணரத்னே, சதீரா சமரவிக்கிரமா, அசலங்கா, தனஞ்செய்ய டி சில்வா, துஷான் ஹேமந்தா, துனித் வெல்லாலகே, மகீஷ் தீக்சனா, மதிஷா பதிராணா, லகிரு குமாரா, கசுன் ரஜிதா, தில்சான் மதுசங்கா