Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூத் ஒருதினப் போட்டி.... இந்தியாவை வென்றது இலங்கை!

கொழும்பு: இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு எதிரான யூத் ஒருதினப் போட்டித் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றுள்ளது. முதலில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட யூத் டெஸ்ட் போட்டித் தொடரில் இந்தியா 2-0 என அபாரமாக வென்றது.

Srilanka u-19 team wins against india

அதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடர் துவங்கியுள்ளது. இதில் முதல் ஒருதினப் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது ஒருதினப் போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 47 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. பவன் ஷா 49, ஆயுஷ் பதோனி 36, சமீர் சவுத்ரி 32 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை அணி 45.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நிபுன் தனஞ்சயா ஆட்டமிழக்காமல் 92 ரன்களும், பசிந்து சூரியபண்டாரா 52 ரன்களும் எடுத்தனர்.

அதையடுத்து 5 போட்டித் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளன.

Story first published: Friday, August 3, 2018, 14:14 [IST]
Other articles published on Aug 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+