
வீணான சதம்
பொறுப்புடன் விளையாடிய உஸ்மான் கவாஜா 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் 3வது விக்கெட்டுக்கு ஸ்மித், லாபஸ்சேங் ஜோடி சேர்ந்து 134 ரன்கள் சேர்த்தனர். முன்னாள் கேப்டன் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை பூர்த்தி செய்தார். லாபஸ்சேங் 104 ரன்களில் அடித்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியே முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

சந்திமால் இரட்டை சதம்
ஸ்மித் 145 ரன்கள் விளாச ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் அடித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி யில் நிசாங்கா 6 ரன்னில் ஆட்டமிழந்தார். கருண ரத்னே 86 ரன்களும், குசேல் மெண்டிஸ் 85 ரன்களும், மேத்தீயூஸ் அரைசதமும் அடித்து அட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய சந்திமால் இரட்டை சதம் விளாசினார்.

ஆஸி. தோல்வி
இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 554 ரன்கள் குவித்தது. 190 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் வார்னர் 24 ரன்களும், கவாஜா 29 ரன்களும்,லாபஸ்சேங் 32 ரன்களும் அடிக்க, ஸ்மித் டக் அவுட்டாகி வெளியேற, ஆஸ்திரேலிய அணி தடுமாற தொடங்கியது. இதன் பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்தியாவுக்கு வாய்ப்பு
இதனால் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தற்போது இந்த தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியாவின் புள்ளி சதவீதம் குறைந்துள்ளது. இதனால் தற்போது இந்தியாவுக்கு மெல்லிய கதவு திறந்துள்ளது. அதற்கு இந்தியா எஞ்சிய 6 டெஸ்டிலும் வெல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications











