இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் - 18 மாதங்களுக்கு பிறகு ஸ்மித் சதம்.. புதிய சாதனை..கோலியை முந்தினார்!
காலே: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி,
2வது டெஸ்டையும் வென்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வழர்னர் 5 ரன்களில் ரஜிதா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

இதனையடுத்து உஸ்மான் கவாஜா உடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லாபஸ்சேங் பொறப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். உஸ்மான் கவாஜா 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் 3வது விக்கெட்டுக்கு ஸ்மித், லாபஸ்சேங் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய மார்னஸ் லாபஸ்செங் அந்நிய மண்ணில் முதல் சதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித், 18 மாதங்களுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலி கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து 27வது சதத்தில் மட்டுமே உள்ளார்.

தற்போது ஸ்மித் அவரை முந்திவிட்டார். லாபஸ்சேங் 104 ரன்களில் ஆட்டமிழக்க, இந்த ஜோடி 134 ரன்களை 3வது விக்கெட்டுக்கு சேர்த்தது. ஸ்மித் ஆட்டமிழக்காமல் 109 ரன்களுடன் களத்தில் இருக்க, முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 28 சதங்களை விளாசிய 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications