Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், கோலி ரெக்கார்டை முறியடித்த நியூசி. வீரர்.. இந்திய அணிக்கு எதிராகவும் ரெக்கார்டை தொடர்வாரா?

சாக்ஸ்டன் ஓவல் : நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் இலங்கை அணிக்கு எதிராக 137 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

ராஸ் டெய்லர் ஒருநாள் போட்டிகளில் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். தற்போது நடந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் கலக்கி வருகிறார்.

20வது சர்வதேச சதம்

20வது சர்வதேச சதம்

இலங்கை அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ராஸ் டெய்லர் 137 ரன்கள் அடித்து தன் 20வது சர்வதேச ஒருநாள் போட்டிகள் சதத்தை கடந்தார். நியூசிலாந்து வீரர்களிலேயே அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கோலி - சச்சின் சாதனை

கோலி - சச்சின் சாதனை

மேலும், அவர் தொடர்ந்து ஆறாவது முறையாக ஒருநாள் போட்டிகளில் 5௦ அல்லது அதற்கும் மேலான ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் சிறந்த பேட்ஸ்மேன்கள் கோலி, சச்சினின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

ஐந்து முறை மட்டுமே

ஐந்து முறை மட்டுமே

இந்திய அளவில் சச்சின் மற்றும் கோலி 5 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 50+ ரன்களை குவித்து இருந்தனர். ராஸ் டெய்லர் ஆறு முறை 50+ ரன்களை தொடர்ந்து அடித்து இவர்களை முந்தியுள்ளார்.

ஜாவேத் மியான்தத் சாதனை

ஜாவேத் மியான்தத் சாதனை

எனினும், இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் பாகிஸ்தானின் ஜாவேத் மியான்தத் ஆவார். அவர் தொடர்ந்து 9 ஒருநாள் போட்டிகளில் 50+ ரன்களை அடித்துள்ளார். அவரை எட்ட ராஸ் டெய்லர் இன்னும் மூன்று போட்டிகளில் அரைசதம் அடிக்க வேண்டும். அதுவும் இந்திய அணிக்கு எதிராக!!

இந்தியாவுடன் ஒருநாள் தொடர்

இந்தியாவுடன் ஒருநாள் தொடர்

நியூசிலாந்து அணி அடுத்து இந்தியாவுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் முடிந்த உடன் நியூசிலாந்து ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது.

நம்பிக்கையுடன் அணிகள்

நம்பிக்கையுடன் அணிகள்

நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக வெற்றிகளை பெற்று நம்பிக்கையுடன் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தியாவும். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்று நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

Story first published: Tuesday, January 8, 2019, 13:54 [IST]
Other articles published on Jan 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+