Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கருணாரத்னே சதம்.. முதல் நாளே இலங்கை ஆல் அவுட்.. ரபாடா, ஷம்சிக்கு 7 விக்கெட்.. தெ.ஆ ஆதிக்கம்

காலே: இலங்கை - தென்னாபிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இலங்கை ஆல் அவுட் ஆனது. இலங்கையின் கருணாரத்னே 158 ரன்கள் குவித்தார். தென்னாபிரிக்கா வீரர்கள் சிறப்பாக பந்து வீசி முதல் நாள் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினர்.

இலங்கையில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக குணதிலகா மற்றும் கருணாரத்னே களம் இறங்கினர். குணதிலகா 26 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டீ சில்வா 11, குசால் மென்டிஸ் 24 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அப்போது இலங்கை 115-3 என்ற நிலையில் இருந்தது.

srilanka vs southafrica 1st test day 1 scores


தொடர்ந்து வந்த இலங்கை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 176 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து பரிதாப நிலையில் இருந்தது. ஆட்டமிழந்த எட்டு இலங்கை வீரர்களில் ஒருவர் கூட 36 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை. தனி மரமாக நின்று ரன் சேர்த்துக் கொண்டு இருந்தார் கருணாரத்னே.

இறுதியில் வந்த லக்மல் மற்றும் சண்டகன் 40 மற்றும் 50 பந்துகள் சந்தித்து, கருணாரத்னே ரன் சேர்க்க பக்கபலமாக நின்றனர். இருநூறு ரன்களுக்குள் ஆட்டமிழக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இலங்கை தொடர்ந்து ரன் சேர்த்தது. 159 பந்துகளில் சதம் அடித்த கருணரத்னே, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் எடுத்து இருந்தார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 287 ரன்கள் எடுத்தது. இலங்கையின் மொத்த ரன்களில் 55 சதவிகித ரன்களை கருணாரத்னே மட்டுமே எடுத்திருந்தார்.

தென்னாபிரிக்கா அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. ரபாடா சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். ஷம்சி மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.

அடுத்து ஆட வந்த தென்னாபிரிக்கா, மூன்றாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. ரங்கனா ஹெராத் பந்தில், மாத்யூசிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார், மார்க்ரம். நான்கு ஓவர்கள் முடிந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தென்னாபிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் மற்றும் கேசவ் மகராஜ் களத்தில் நிற்கின்றனர்.







Story first published: Friday, July 13, 2018, 10:55 [IST]
Other articles published on Jul 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+