Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை அணி முழுத்திறனையும் வெளிப்படுத்தினால் வெல்லலாம்–பயிற்சியாளர் பெய்லிஸ்

மும்பை: இலங்கை அணி வீரர்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தினால் ஏப்ரல் 2 - ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து கோப்பையை வெல்ல முடியும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் தர்வார் பெய்லிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Sri Lanka coach Trevor Bayliss

தங்களுடைய கவனத்தை செலுத்தி திறமையாக விளையாடினால் எதிரணியை கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கி வெற்றி பெற முடியும் என்றும் கூறிய அவர், சனிக்கிழமையன்று ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இரு அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றி பெற்று மகுடம் சூட்டப்போவது யார் என்பது தெரிய வரும் என்றார்.

சொந்த மண்ணில் விளையாடுவது என்பது ஒவ்வொரு அணிக்கும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கும். இந்திய அணி இறுதிப்போட்டியை தன் சொந்த மண்ணில் விளையாட உள்ளதால் நெருக்கடி அதிகம் இருக்கும் என்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்தவரான இந்தப் பயிற்சியாளர் தெரிவித்தார்.

இந்த போட்டியில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சரிசமமாக இருப்பதாகவும் கூறிய பெய்லிஸ் இந்திய அணி வீரர்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்

உலக கோப்பை கிரிக்கெட்:படங்கள் India vs Srilanka

Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+