Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டி நடக்கும் போது சரக்கு விற்பனை.. “வேகமாக” நடவடிக்கை எடுத்த இலங்கை கிரிக்கெட்

கொழும்பு : இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணி கிரிக்கெட் தொடர்களில் ஆடி வருகிறது.

முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள், அடுத்து ஐந்து ஒருநாள் போட்டிகள் முடிவடைந்து உள்ள நிலையில், இன்னும் ஒரு டி20 போட்டி மட்டுமே மீதம் இருக்கிறது.

இந்நிலையில், மைதானத்தில் உணவு மற்றும் பானங்கள் விற்கும் நிறுவனம், இங்கிலாந்து நாட்டினருக்கு போட்டி நடைபெறும் போது மதுபானங்களை விற்றதாக தெரிய வந்துள்ளது.

உரிமம் இல்லாமல் மது விற்பனை

உரிமம் இல்லாமல் மது விற்பனை

அந்த உணவு விற்பனை நிறுவனத்தின் மீது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் போட்டி நடைபெறும் போதே இங்கிலாந்து நாட்டு ரசிகர்களுக்கு மைதானத்தில் வைத்து தகுந்த உரிமம் இல்லாமல் விஸ்கி, வைன் போன்ற மதுபானங்களை விற்றதாக கூறி அவர்களை தடை செய்துள்ளது இலங்கை கிரிக்கெட்.

ரொம்ப வேகமா நடவடிக்கை

ரொம்ப வேகமா நடவடிக்கை

இதில் வேடிக்கை என்னவென்றால், கிட்டத்தட்ட டெஸ்ட், ஒருநாள் என அனைத்து போட்டிகளும் முடிந்து இன்னும் ஒரே ஒரு டி20 போட்டி மட்டும் மீதமிருக்கும் நிலையில் ஐந்தாவது ஒருநாள் போட்டியின் போது தான் இந்த விஷயத்தை கண்டுபிடித்து அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரெய்டு தான் காரணம்

ரெய்டு தான் காரணம்

இலங்கை கிரிக்கெட் தானாக இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என தோன்றுகிறது. காரணம், ஐந்தாவது போட்டியின் இடையே இலங்கை நாட்டு வரித்துறை அதிகாரிகள் மைதானத்தில் ரெய்டு நடத்தினர். அதன், பின்னணியில் தான் இலங்கை கிரிக்கெட் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

டிக்கெட் விலை சர்ச்சை

டிக்கெட் விலை சர்ச்சை

இந்த தொடர் துவங்கியதில் இருந்தே, இங்கிலாந்து நாட்டு ரசிகர்கள், உள்ளூர் மக்களுக்கும், தங்களுக்கும் டிக்கெட் விலையில் மாறுபாடு இருப்பதாகவும், விலையைக் குறைக்க வேண்டும் எனவும் புகார் கூறி வந்தனர். ஆனால், இலங்கை கிரிக்கெட், அனைவருக்கும் ஒரே விலையில் தான் டிக்கெட் விற்கப்படுவதாக கூறி வந்தது. இந்த விவகாரத்தை துருவிப் பார்த்தால், டிக்கெட் விலையோடு தடை செய்யப்பட்ட உணவு நிறுவனத்தின் சேவையையும் சேர்த்து இங்கிலாந்து நாட்டு ரசிகர்களுக்கு டிக்கெட் விற்பனை நடந்துள்ளது.

கடைசியில் மாட்டிக் கொண்டார்கள்

கடைசியில் மாட்டிக் கொண்டார்கள்

ஆக மொத்தத்தில் கொள்ளையடித்து விட்டு, கடைசியில் மாட்டிக் கொண்டுவிட்டார்கள் என்றே தெரிகிறது. இலங்கை கிரிக்கெட் தன்னை காத்துக் கொள்ள அந்த நிறுவனத்தின் மீது பழி போட்டுள்ளதோ என நினைக்கத் தோன்றுகிறது.

Story first published: Friday, October 26, 2018, 18:56 [IST]
Other articles published on Oct 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+