கொழும்பு : இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றி இருப்பதை அந்த நாட்டு ரசிகர்கள் ஏதோ உலக கோப்பையை வென்றது போல் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை அணி கடந்த சில ஆண்டுகளாக கத்துக்குட்டி அணிகள் போல் விளையாடி வந்ததால், அவர்களை கற்றுக் குட்டி லிஸ்டிலேயே ஐசிசி வைத்திருக்கிறது.
மேலும் டி20 உலக கோப்பை ஒரு நாள் உலகக்கோப்பை என அனைத்து தொடர்களிலும் சொதப்பிய இலங்கை அணிக்கு தற்போது மிகப்பெரிய ஒரு ஏமாற்றம் காத்திருக்கிறது. அதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை வரும் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.

இதில் டாப் எட்டு அணிகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐசிசி விதித்த
கெடுக்குள் இலங்கை அணி தர வரிசையில் முன்னேறாததால் அவர்களை சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து ஐசிசி நீக்கி இருக்கிறது. இதனால் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் கூட சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ளது.
ஆனால், 1996 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இலங்கை அணி தற்போது பரிதாபமாக வெளியேறி இருக்கிறது. தற்போது இந்தியாவை வீழ்த்திய நிலையில் தங்களுடைய திறமையை நிரூபித்தாலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முடியாது என்பது தான் உண்மையாகும். ஒருவேளை ஏதாவது ஒரு அணி விலகினால் அப்போதாவது இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.
தற்போது உள்ள ஒரு நாள் தரவரிசை பட்டியலில் இலங்கை அணி ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த செயல்பாட்டை இலங்கை அணி முன்பே செய்திருந்தால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலாவது தகுதி பெற்று இருக்கலாம். ஆனால்
தற்போது இலங்கை அணி ரசிகர்கள் இந்தியா விளையாடுவதை டிவியில் அமர்ந்துதான் பார்க்க வேண்டும்.
ஒரு காலத்தில் உலகின் முன்னணி அணியாக விளங்கிய இலங்கை, தற்போது மீண்டும் மெல்ல மெல்ல வெற்றி பாதைக்கு திரும்பி இருப்பது கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும் இலங்கை அணி இந்த வெற்றியை கொண்டாடி அப்படியே நிறுத்திக் கொள்ளாமல்,தொடர்ந்து செய்தால் அடுத்த சாம்பிள்ஸ் கோப்பை தொடருக்காவது தகுதி பெற முடியும்.