Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் குழந்தைக்கு இவர் தான் தந்தை.. பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் மீது பெண் நீதிமன்றத்தில் வழக்கு

கொழும்பு: தனது இரண்டு மாத கைக்குழந்தைக்கு இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்கா கருணரத்னே தான் தந்தை என பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாலியல் வழக்கில் சிக்குவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே டி20 உலக கோப்பைக்கு சென்ற இலங்கை வீரர் தனுஷ்கா குணத்திலகா சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

Chamika Karunaratne

இதனை அடுத்து குணத்திலகா கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மேலும் ஒரு கிரிக்கெட் வீரர் தற்போது சிக்கி இருக்கிறார். இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான சமிக்கா கருணரத்தே, தான் தற்போது சிக்கி உள்ளார்.

இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 26 ஒரு நாள் மற்றும் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 29 வயதான அவர், தம்மை காதலித்து திருமணம் செய்துவிட்டு குழந்தை பெற்றதாகவும்,ஆனால் இரண்டு மாத கைக்குழந்தையை யார் என்று தெரியாது என்றும் தமக்கும் அந்த குழந்தைக்கும் தொடர்பு இல்லை என்று கூறி விட்டதாகவும் அந்த பெண் சமிக்கா கருணரத்னே மீது புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சமிக்கா கருணரத்னேவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால், அவர் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருக்கிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியில் என்னுடைய குழந்தைக்கு சமிக்கா கருணரத்னே தான் தந்தை. அவர் தன்னுடைய பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க நான் தள்ளப்பட்டு இருக்கின்றேன். என்னுடைய குழந்தை இலங்கையில் தான் வாழ வேண்டும்.

அவர்தான் என் குழந்தைக்கு தந்தை என்று எனக்கு நன்றாக தெரியும். அவர் என் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் தான் எனக்கு தேவை என அந்தப் பெண் கூறி இருக்கிறார். டி என் ஏ டெஸ்ட் கேட்டு இலங்கை கிரிக்கெட் வீரர் மீது பெண் ஒருவர் அளித்த புகார் அந்த நாட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Story first published: Tuesday, November 25, 2025, 13:53 [IST]
Other articles published on Nov 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+