ஆஸி.யில் இளம் பெண்ணுடன் உல்லாசம்.. இலங்கை கிரிக்கெட் வீரர் அதிரடி கைது..பாலியல் துன்புறுத்தல் புகார்
சிட்னி : டி20 உலககோப்பையில் விளையாட ஆஸ்திரேலிய சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனஷ்கா குணதிலா அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதான குணதிலகா, இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்று டி20 உலககோப்பையில் விளையாடினார். முதல் சுற்றில் விளையாடும் போதே அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் தொடரை விட்டு வெளியேறினாலும், நாடு திரும்பாமல் இலங்கை அணியுடன் பயணம் செய்வதாக கூறினார்.

குணதிலகாவின் லீலை
முதலில், நாடு மேல் இவ்வளவு பக்தியா? காயம் அடைந்தாலும் நாடு திரும்பாமல், இலங்கை கிரிக்கெட் அணியுடன் இருந்து உடல் தகுதியை மீட்க முயற்சி செய்ய போகிறார் என்று ரசிகர்களும் நினைத்தனர். அதன் பிறகு தான், அவர் ஆஸ்திரேலியாவில் தங்கியது வேறு ஒரு பலான விசயத்துக்காக என்று தெரிந்தது.

உல்லாசம்
காயம் அடைந்தால் வீரர்கள் முதலில் ஓய்வில் இருக்க வேண்டும். பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட மாட்டார்கள். இதனை பயன்படுத்தி கொண்ட குணதிலகா, ஹோட்டல் அறையில் இருந்து கொண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் , டேட்டிங் ஆப் பயன்படுத்தி, அதில் பழுகும் பெண்களுடன் வெளியே சென்று ஜாலியாக தனது பொழுதை கழித்து இருக்கிறார்.

பலாத்காரம்
அப்படி தான் 29 வயதான பெண் ஒருவருடன் குணதிலகா, பழகி, அவரை தனி இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவிய சோகத்தில் இலங்கை வீரர்கள் ஹோட்டலில் இருந்துள்ளனர். அப்போது நள்ளிரவு உள்ளே புகுந்த போலீசார் குணதிலகாவை கைது செய்தனர்.

குணதிலகா கைது
குணதிலகா மீது பெண்ணை காயப்படுத்தியது, அனுமதியில்லாமல் பலாத்காரம் செய்தது போன்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனையடுத்து குணதிலகா தரப்பில் ஜாமீன் வழங்க கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து, ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து, சிறையில் குணதிலகா அடைக்கப்பட்டார். ஏற்கனவே குணதிலகா, இங்கிலாந்தில் பயோ பபுளை மீறி வெளியே சென்று கஞ்சா அடித்து ஒரு ஆண்டு தடை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications