Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏமாற்றிய இலங்கை பிளேயர்... கண்டுகொள்ளாத அம்பயர்... நேற்றைய போட்டியில் என்ன நடந்தது?

கொல்கத்தா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடத்த மூன்றாவது நாள் ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது.

இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால் இந்த சர்ச்சைக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார். அதன்படி நேற்று இவர் பந்தை தடுப்பது போல செயல்பட்டு இந்த பேட்ஸ்மேன்களை ஏமாற்றி இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் விதிகளின் படி இது மிகப்பெரிய தவறு ஆகும். ஆனால் இதை களத்தில் இருந்த நடுவர்கள் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அமைதியா இருந்துள்ளனர். தற்போது இது பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

ஐசிசி ரூல்

ஐசிசி ரூல்

மைதானத்தில் எதிரணியை குழப்பி, விக்கெட் எடுக்கும் சில ஸ்டைல்களுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்து இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் விதி 41.5ன் படி எதிரணியைச் சேர்ந்தவரை வார்த்தைகள் மூலமாகவோ, செயல்கள் மூலமாகவோ குழப்பி விக்கெட் எடுப்பது, ரன் எடுப்பது தவறு என கூறப்பட்டுள்ளது. "பேக் பீல்டிங்'' என அழைக்கப்படும் இந்தவித விளையாட்டுக்கு அபராதமாக எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் எனவும் விதியில் இருக்கிறது.

ஏமாற்றிய தினேஷ் சண்டிமால்

ஏமாற்றிய தினேஷ் சண்டிமால்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேற்று நடத்த மூன்றாவது நாள் டெஸ்ட் போட்டியில் தினேஷ் சண்டிமால் பேக் பீல்டிங் செய்து இருக்கிறார். புவனேஷ்வர் குமார் பவுண்டரி லைனை நோக்கி அடித்த பந்தை இவர் எடுப்பதற்காக ஓடினார். ஆனால் பந்தை எடுக்காமலே எடுத்தது போல இவர் செய்கை செய்து இருக்கிறார். மேலும் அதை கீப்பரிடம் தூக்கி எறிவது போலவும் நடித்து இருக்கிறார்.

அம்பயர் மௌனம்

அம்பயர் மௌனம்

இதன் காரணமாக இரண்டாவது ரன் செல்ல இருந்த புவனேஷ்வர் குமார் ஒரு ரன்னுடன் நின்றுவிட்டார். அதன்பின்பே சண்டிமால் பந்தை எடுத்து பொறுமையாக வீசினார். இதனை கவனித்துக் கொண்டு இருந்த அம்பயர் எதுவும் சொல்லாமல் இருந்திருக்கிறார். மேலும் தினேஷ் சண்டிமாலின் முகத்தை சில நிமிடம் பார்த்துவிட்டு ஏதும் எச்சரிக்கை கூட செய்யாமல் சென்று இருக்கிறார்.

கோஹ்லியின் கோபம்

கோஹ்லியின் கோபம்

இதை பார்த்த கோஹ்லி உடனே கோபம் அடைந்தார். இது போன்ற பேக் பீல்டிங் முறைக்கு 5 ரன்கள் அபராதமாக எதிரணிக்கு வழங்கப்படும். அதன்படி இந்திய அணிக்கு 5 ரன்கள் வழக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அம்பயர் அப்படி செய்யாதால் கோஹ்லி கோபம் அடைந்தார். டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து கத்தினார். பின் போட்டி முடிந்த போது அம்பயரிடம் இது குறித்து முறையிட்டார். ஆனால் அந்த 5 ரன்கள் வழங்கப்படவேயில்லை.

Story first published: Sunday, November 19, 2017, 10:52 [IST]
Other articles published on Nov 19, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+