ரசிகர்கள் முன் சீன் காட்ட பைக்கில் பறந்த கிரிக்கெட் வீரர்..!! அப்புறம் நடந்த கூத்தை பாருங்க..!!
Recommended Video
கொழும்பு: ரசிகர்கள் முன்னிலையில் பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்ற இலங்கை முன்னணி வீரர் கீழே விழுந்து அனைவர் முன்னிலையில் அசிங்கப்பட்டார்.
இலங்கை அணியானது, வங்கதேசத்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொண்டது. அந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
அந்த தொடரில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு பின்னர் நடைபெற்ற ஒரு சம்பவத்தை, கண்டு ரசிகர்கள் வயிறு வலிக்க சிரித்து, சிரித்து மகிழ்கின்றனர். போட்டி முடிந்த பிறகு இலங்கை வீரரான குஷால் மெண்டிஸ் பைக்கில் சென்று உற்சாகமாக மகிழ்ந்த போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

ஆட்ட நாயகன்
கொழும்புவில் வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நடந்தது. அந்த போட்டியிலும் வென்ற இலங்கை தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. 3வது போட்டியில் கலந்து கொண்ட குஷால் மெண்டிஸ் அரைசதம் கடந்தார். அவருக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது.

பைக்கில் பறந்து மகிழ்ச்சி
அந்த தொடரை கைப்பற்றியதால் குஷியான மெண்டிஸ், சக வீரரான ஷீகன் ஜெயசூர்யாவுடன் பைக்கில் மைதானத்தில் பறந்தார். அந்த பைக்கானது, மென்டிசுக்கு தொடர் நாயகனுக்கு வழங்கப்பட்ட பைக். அதை எடுத்துக்கொண்டு ரசிகர்கள் முன்னிலையில் மைதானத்தை வலம் வந்தார்.
விழுந்தார் மெண்டிஸ்
அவ்வாறு அவர் மைதானத்தை சுற்றி வரும்போது நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார். அப்பொழுது மைதானத்தில் உள்ள பாதுகாவலர்கள் அவரை வந்து மீட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறிய காயம்
கீழே விழுந்து சில நிமிடங்கள் வரை அவர் எழுந்திருக்காமல் இருந்ததால் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சிலர் இந்த வீடியோவை குறும்பு ரசிகர்கள், நகைச்சுவையாக கமெண்ட் செய்து, இணையத்தில் உலா விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications