Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனா வைரஸ்.. இலங்கை அணியின் 2 வீரர்களுக்கு பாசிட்டிவ்.. ஆசியக் கோப்பைத் தொடருக்கு சிக்கல்!

கொழும்பு: ஆசியக் கோப்பைத் தொடருக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இலங்கை அணியின் 2 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாள் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஆசியக் கோப்பைத் தொடர் ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் நடக்கவுள்ளது. அதில் பாகிஸ்தான் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளும் நடக்கவுள்ளன. இந்த ஆசியக் கோப்பைத் தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Srilankan Players Kusal Perera and Avishka Fernando tested positive for COVID 19 ahead of Asia Cup 2023

ஆசியக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு 4 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், இலங்கை அணி சிக்கலில் சிக்கியுள்ளது. இலங்கை அணி வீரர்கள் பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர்கள் பலரும் காயத்தில் சிக்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் இலங்கை அணி ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான குரூப் போட்டியில் இலங்கை அணி விளையாட உள்ளது. இந்த நிலையில் துஷ்மந்தா சமீராவுக்கு தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசியக் கோப்பைத் தொடரில் இருந்து நம்பிக்கை நட்சத்திரமான சமீரா விலக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எல்பிஎல் தொடரில் வனிந்து ஹசரங்கா தசைபிடிப்பு பிரச்சனையில் சிக்கினார். இதனால் இவரும் குரூப் போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் இலங்கை அணியின் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் பெரேரா ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்ச்சை அ
ளிக்கப்பட்டு வரும் சூழலில், இலங்கை அணியில் சேர்க்கப்படுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எல்பிஎல் தொடரின் போதே கொரோனா பாதிப்பில் சிக்கியதால், ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாட இருவரும் நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 26, 2023, 12:26 [IST]
Other articles published on Aug 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+