உசுருக்கு உத்தரவாதமில்ல..! செத்துட்டா..? மலிங்கா உள்ளிட்ட 10 வீரர்கள் கதறல்
Recommended Video
கொழும்பு: பாதுகாப்பு, அச்சுறுத்தல் காரணமாக, பாகிஸ்தான் சென்று விளையாட மலிங்கா உள்பட 10 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுத்து விட்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணி வரும் 27ம் தேதி முதல் அக்டோபர் 9 வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்கிறது. அந்நாட்டுடன் 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடும் வகையில் சுற்றுப்பயணம் அமைக்கப்பட்டுள்ளது.
போட்டியில் விளையாட விருப்பம் உள்ள வீரர்கள் அணி தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. அப்போது பாகிஸ்தான் சென்று விளையாடுவதில் சில முக்கிய வீரர்களின் குடும்பங்கள் விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகின.

கூட்டத்துக்கு ஏற்பாடு
இது தொடர்பாக, அனைத்து வீரர்களையும் சமாதானப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் பெர்னாண்டோ அறிவுறுத்தி இருந்தார். அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதற்கான கூட்டமும் நடத்தப்பட்டது.

பெரும் பின்னடைவு
அதனால் திட்டமிட்டபடி இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அணி வீரர்களின் இந்த நடவடிக்கை அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும், பாகிஸ்தானுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

பலர் ஆதரவு
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்று எடுத்த முடிவு தவறல்ல என்று முன்னாள் ஜாம்பவான்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்கள் 2009ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகின்றனர்.

லாகூர் தாக்குதல்
2009ம் ஆண்டு, லாகூரில் இலங்கை அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் பல இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இலங்கை கிரிக்கெட் அணி 2து கிரிக்கெட் டெஸ்டின் 3வது நாளுக்காக கடாபி மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தீவிரவாதிகள் குழு பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.

பாதுகாப்பு எங்கே?
குறைந்தது 6 கிரிக்கெட் வீரர்கள் காயம் அடைந்தனர். 7 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் இந்த வீரர்கள் விமானத்தில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications