Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரையிறுதியா? ஆறுதல் வெற்றியா? இலங்கை, தென் ஆப்ரிக்காவை உற்று நோக்கும் ரசிகர்கள்

Recommended Video

வெற்றி யாருக்கு ? இலங்கை, தென் ஆப்ரிக்காவை உற்று நோக்கும் ரசிகர்கள

செஸ்ட்டர்லேஸ்ட்ரீட்: அரையிறுதி வாய்ப்புக்காக போராடி வரும் இலங்கை, தென் ஆப்ரிக்காவை முக்கிய ஆட்டத்தில் இன்று சந்திக்கிறது.

உலக கோப்பை எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி களமிறங்கியிருந்த இலங்கை அணி, 2 வெற்றிகள், 2 கைவிடப்பட்ட போட்டிகள் மற்றும் 2 தோல்விகள் என 6 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. தொடரின் ஆரம்பத்தில் இலங்கை தடுமாறினாலும், இறுதியாக பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தி அதீத நம்பிக்கையுடன் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.

கடந்த போட்டியில் இலங்கையின் பவுலிங் அசத்தலாக இருந்தது. குறிப்பாக, மெதிவ்ஸ், மலிங்கா மற்றும் விக்கெட்டினை கைப்பற்றாவிட்டாலும் பந்துவீச்சில் அழுத்தம் கொடுத்திருந்த பெரேரா ஆகிய அனுபவ வீரர்களின் பங்களிப்பு வரவேற்கப்பட்டது.

முக்கிய மாற்றங்கள் உண்டு

முக்கிய மாற்றங்கள் உண்டு

இங்கிலாந்துடன் வெற்றி பெற்றிருந்தாலும் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முக்கிய மாற்றங்களை அந்த அணி மேற்கொள்ள வேண்டும். தொடக்க போட்டிகளில் இலங்கை அணியின் நடுவரிசை பேட்ஸபென்கள் சொதப்பல் ரகமாக இருந்து வந்தனர். அவர்கள் இன்றைய போட்டியில் சோபிக்க வேண்டும்.

காட்சிகள் மாறின

காட்சிகள் மாறின

தென் ஆப்ரிக்க அணியை பார்க்கும் போது, உலக கோப்பை கைப்பற்றும் வாய்ப்புள்ள அணிகள் என்ற பட்டியலில் இருந்தது. ஆனால், பின்னர், ஏமாற்றத்துக்குள்ளான அணியாக மாறியிருந்தது. அரையிறுதி வாய்ப்பை இழந்த 2வது அணியாகவும் காட்சியளிக்கிறது.

சவால் கொடுக்குமா?

சவால் கொடுக்குமா?

இப்போதுவரை தங்களுடைய 7 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்ரிக்க அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளதுடன், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது. எனவே, இலங்கைக்கு எதிரான போட்டியில் முழு பலத்தையும் வெளிப்படுத்தி இலங்கைக்கு சவால் கொடுக்க காத்திருக்கிறது.

கடந்தகால வரலாறு

கடந்தகால வரலாறு

இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணியின் கடந்தகால ஒருநாள் முடிவுகளை பார்க்கும் போது, தென் ஆப்ரிக்க அணி அதிகம் சாதகம் கொண்ட அணியாக உள்ளது. அதேநேரம், உலக கோப்பை தொடர்களில் 2 அணிகளும் மோதியுள்ள 5 போட்டிகளில் இலங்கை ஒரு வெற்றியையும், தென் ஆப்ரிக்க அணி 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

Story first published: Friday, June 28, 2019, 12:49 [IST]
Other articles published on Jun 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+