Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் தலைவர் பதவிக்கு அடிபோடும் சீனிவாசன்...தென் மாநில கிரிக்கெட் சங்க ஆதரவை நாடுகிறார்

டெல்லி: கிரிககெட் வாரியத் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பும் என்.சீனிவாசன் அதற்காக தென் மாநில கிரிக்கெட் சங்கங்களின் ஆதரவை நாடியுள்ளார்.

இதற்காக சென்னையில் ஒரு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார். இருப்பினும் அதில் கோவா மற்றும் ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் செப்டம்பர் 29ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

Srinivasan calls southern units to garner support

சீனிவாசன் தற்போது தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். ஜக்மோகன் டால்மியாதான் இடைக்காலத் தலைவராக செயல்படுகிறார். இருப்பினும் சென்னைக் கூட்டத்திற்கு சீனியே தலைமை வகிப்பார் என்று டால்மியா அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் தலைவர் பதவியில் தானே தொடர சீனிவாசன் கோரிக்கை வைப்பார் என்று தெரிகிறது. அப்படி வரும்போது தென் மாநில கிரிக்கெட் சங்கஙக்ள் தனக்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும் என்று சீனிவாசன் விரும்புகிறாராம்.

இதையடுத்தே தென் மாநிலங்களைச் சேர்ந்த கிரிக்கெட் சங்கத் தலைவர்களின் கூட்டத்திற்கு சென்னையில் ஏற்பாடு செய்திருந்தார். இருப்பினும் இதில் கோவா மற்றும் ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து கோவா கிரிக்கெட் சங்கத் தலைவர் வினோத் பாத்கே கூறுகையில், சென்னையில் சீனிவாசன் தென் மாநில கிரிக்கெட் சங்கங்களின் தலைவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் எனக்கு வேறு வேலை இருந்ததால் நான் போகவில்லை.

இது ஆதரவு திரட்டும் கூட்டமா, இல்லையா என்பது குறித்து வெளிப்படையாக சொல்ல முடியாது. இது வாரியத்திற்குட்பட்ட தனிப்பட்ட கூட்டம் அதுகுறித்து வெளியில் சொல்ல முடியாது என்றார் அவர்.

இதற்கிடையே, கிட்டத்தட்ட 31 கிரிக்கெட் சங்கங்கள், முன்னாள் தலைவர் சஷாங் மனோகர் வாரியத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட வேண்டும் என்றுவிரும்புகின்றனவாம். மனோகர் பெயரை கோவா கிரிக்கெட் சங்கம்தான் முன்மொழியப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

ஆனால் அதுகுறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பாத்கே கூறியுள்ளார்.

சீனிவாசன் கூட்டிய கூட்டத்தில் ஹைதராபாத், கேரளா, கர்நாடக கிரிக்கெட் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனராம்.

தலைவர் பதவி்க்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 28ம் தேதியாகும். அன்று முற்பகல் 11.30 மணிக்குள் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

Story first published: Monday, September 16, 2013, 15:46 [IST]
Other articles published on Sep 16, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+