''பெஸ்ட் ஆப் லக் சச்சின்''.. சீனிவாசன் கட்டித் தழுவி வாழ்த்து!
மும்பை: சச்சின் டெண்டுல்கரை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்.சீனிவாசன் நேரில் சந்தித்து அவரது 200வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
நேற்றுடன் தனது கடைசி கிரிக்கெட் பயிற்சியை நிறைவு செய்தார் சச்சின். இதையடுத்து நேற்று முழுவதும் சச்சினின் பயிற்சி உணர்ச்சிமிக்கதாக இருந்தது.
சச்சினை நேற்று பாராட்டி சிறிய அளவிலான விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடைசிப் பயிற்சி
நேற்று காலையில் சச்சின் பயிற்சிக்காக மைதானத்திற்கு வந்தபோது அத்தனை பேரும் அவரை உணர்ச்சி பொங்கப் பார்த்தனர். ஆனால் சச்சின் வழக்கம் போலவே இயல்பாக இருந்தார்.

மைதான ஊழியர்கள் நெகிழ்ச்சி
வாங்கடே மைதானத்தின் ஊழியர்கள் அனைவருமே நேற்று பணியில் இருந்தனர். அத்தனை பேரும் சச்சினை பார்த்து பேசி மகிழ்ந்தனர். அவர்களில் சிலர் சச்சினை 15 வயது முதலே பார்த்து வருவதாக பெருமிதத்துடன் கூறியது நெகிழச்சியாக இருந்தது.

பூச்செண்டு கொடுத்து வாழ்த்திய ஊழியர்கள்
பின்னர் மைதான ஊழியர்கள் இணைந்து ஒரு சிறிய பாராட்டு விழாவை நடத்தினர். அதில் சச்சினுக்கு பூச்செண்டு கொடுத்து அவர்கள் வாழ்த்தியது உணர்ச்சிகரமான நிமிடமாக இருந்தது.

குரூப் போட்டோ
பின்னர் அவர்களுடன் சச்சின் உற்சாகமாக குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டார். சச்சின் பக்கத்தில் அமர அவர்களிடையே ஏற்பட்ட போட்டியையும் சச்சின் ரசித்துப் பார்த்து சிரித்தார்.

சீனிவாசன் வாழ்த்து
காலையில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்.சீனிவாசன் மைதானத்திற்கு வருகை தந்தார். அவருடன் நிர்வாகிகள் சஞ்சய் படேல், காசி விஸ்வநாதன் ஆகியோரும் வந்தனர். அவர்கள் சச்சினிடம்சென்று வாழ்த்து தெரிவித்தனர். சீனிவாசன், சச்சினை கட்டித் தழுவி வாழ்த்தினார். பின்னர் சிறிது நேரம் அவர்கள் சச்சினுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு விடை பெற்றனர்.


Click it and Unblock the Notifications