Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“மிகவும் பெருமையாக உள்ளது.. ஆனால்”.. இந்திய அணியின் படுதோல்வி.. விராட் கோலி உருக்கமான பதிவு!

அடிலெய்ட்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறிய சூழலில் விராட் கோலி உருக்கமான பதிவை போட்டுள்ளார்.

அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மோசமாக தோற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 168 என்ற சவாலான இலக்கை தான் நிர்ணயித்தது. ஆனால் பவுலிங்கில் பெரிதும் ஏமாற்றியதால் இங்கிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் 169 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணி தோல்வி

இந்திய அணி தோல்வி

இந்த போட்டியில் இந்திய அணியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கான அசுர பலம் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக சொதப்பி வந்த விராட் கோலி, தொடர்ச்சியாக அரைசதங்களை விளாசி அசத்தினார். அவரின் உதவியோடு இந்தாண்டு கோப்பையை வென்றுவிடுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்த போது தான் பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

இந்நிலையில் இந்திய அணி குறித்து விராட் கோலி உருக்கமான பதிவை ட்விட்டரில் போட்டுள்ளார். அதில், எங்களின் கனவுகளையும் ஆசைகளையும், அடைய முடியாமல் ஆஸ்திரேலிய கரையை விட்டு செல்கிறோம். நிறைய ஏமாற்றங்கள் இருக்கின்றன. எனினும் நிறைய நினைவுகளையும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடனும் இங்கிருந்து செல்கிறோம்.

பெருமையாக உள்ளது

பெருமையாக உள்ளது

இந்திய அணிக்காக அனைத்து மைதானங்களிலும் திரண்டு வந்து முழு ஆதரவையும் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. இந்திய அணியின் ஜெர்ஸியை அணிவதற்கும், நாட்டிற்காக விளையாடுவதற்கும் மிகவும் பெருமைப்படுகிறேன் என விராட் கோலி ட்வீட்டில் கூறியுள்ளார்.

விராட் கோலி ஓய்வா?

விராட் கோலி ஓய்வா?

34 வயதாகும் விராட் கோலி இனி டி20 கிரிக்கெட்டில் விளையாடுவாரா என்பது சந்தேகம் தான். அவர் ஓய்வை அறிவித்துவிட்டு, இனி 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Story first published: Friday, November 11, 2022, 14:45 [IST]
Other articles published on Nov 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+