Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சின்னத்திரை – பெரியதிரை நட்சத்திரங்கள் மோதும் ஸ்டார் கிரிக்கெட் லீக்

சின்னத்திரை நடிகர் சங்கம் நலிந்த சின்னத்திரை கலைஞர்களின் நல்வாழ்விற்கு நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்துகிறது.

ஹெல்ப்பிங் ஆர்ட்ஸ் பவுண்டேஷன் அமைப்புடன் இணைந்து நடத்தும் இந்த போட்டி வருகிற ஆகஸ்ட் 17ந் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இதில் சின்னத்திரை நடிகர்கள் ஒரு அணியாகவும், பெரிய திரை நட்சத்திரங்கள் ஒரு அணியாகவும் மோதுகிறார்கள்.

இதற்கான அணிகள் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, மனோபாலா, சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் எம்.ராஜேந்திரன், செயலாளர் ராஜ்காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்டார் கிரிக்கெட் போட்டி

ஸ்டார் கிரிக்கெட் போட்டி

சிசிஎல் கிரிக்கெட் என்றழைக்கப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டி போல இப்போது புதிதாக ஸ்டார் கிரிக்கெட் லீக் நடத்தப் போகின்றனர். தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்கமும் ஹெல்ப்பிங் ஏஜ் பவுண்டேசனும் இணைந்து இந்த போட்டியை நடத்தவுள்ளார்கள்.

நலிந்த கலைஞர்களுக்கு உதவி

நலிந்த கலைஞர்களுக்கு உதவி

சின்னத்திரை, பெரிய திரைகளில் நடித்த சிறிய நடிகர்கள்.. வசதி வாய்ப்பற்ற நடிகர்களுக்கு உதவி செய்யும் பொருட்டே இந்த பவுண்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது.

சினிமா – சின்னத்திரை

சினிமா – சின்னத்திரை

இந்த பவுண்டேஷனுக்கு நிதி திரட்டும் விதமாக சின்னத்திரை நடிகர்களுக்கும், பெரிய திரை நடிகர்களுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

பரத், வெங்கட்பிரபு

பரத், வெங்கட்பிரபு

பெரிய திரையின் சார்பாக வெங்கட்பிரபு, ஷாம், பரத், எஸ்.பி.பி.சரண், சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், மகேந்திரன், சஞ்சீவ், உதய், அனூப், ஆதவ் கண்ணதாசன், விஷ்ணுவர்த்தன், அசோக், சரண் ஆகியோர் விளையாட உள்ளனர்.

விஷ்வா, சேத்தன்

விஷ்வா, சேத்தன்

சின்னத்திரையின் சார்பாக சதீஷ், விஷ்வா, சேத்தன், பாலாஜி , பானு, விவேக், விஜய் ஆனந்த், தினகர், தேவ், நரேந்திரா, கோபிகர், மது, ஓஏகே தேவர், ஈஸ்வர், ஜெயந்த், தருண், ஸ்ரீதரன் மற்றும் பலரும் இடம் பெறுகின்றனர்.

ஆகஸ்ட்டில் போட்டி

ஆகஸ்ட்டில் போட்டி

இந்த போட்டி வருகிற ஆகஸ்ட் 17ந் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

உடைகள் அறிமுகம்

உடைகள் அறிமுகம்

இதில் பெரிய திரை நட்சத்திரங்களுக்கு நீல நிற உடையும், சின்னத்திரை நடிகர்களுக்கு சிகப்பு நிற உடையும் விளையாட்டு சீருடையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

நடிகர்கள் பங்கேற்பு

நடிகர்கள் பங்கேற்பு

இந்த அறிமுக விழாவில் பரத், சாந்தனு, பிரிதிவி பாண்டியராஜன், நிதின் சத்யா, மகேந்திரன், சஞ்சீவ், விஷ்னு உள்ளிட்ட சின்னத்திரை, சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

Story first published: Wednesday, July 16, 2014, 18:50 [IST]
Other articles published on Jul 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+