Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொந்த செலவில் சூனியம் வைத்த ரோகித் சர்மா.. புதிய உடல் தகுதி விதியால் யாருக்கு ஆபத்து?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடல் தகுதியை உறுதி செய்யும் புதிய முறையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.அதன்படி யோ யோ டெஸ்ட் மற்றும் டெக்ஸா டெஸ்ட் ஆகியவை இனி நடைமுறைப்படுத்தப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஏற்கனவே விராட் கோலி கேப்டனாக இருந்தபோது கடைபிடிக்கப்பட்டது தான் இந்த யோ யோ டெஸ்ட். ரோகித் சர்மா கேப்டனாக அணிக்குள் வந்தவுடன் யோ யோ டெஸ்ட் நடைமுறைப்படுத்தும் முடிவு கைவிடப்பட்டது.

இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இல்லாமல் விளையாடியது காரணம் என்று ரோகித் சர்மா புகார் அளித்தார்.

 தோல்வி அடைய வாய்ப்பு

தோல்வி அடைய வாய்ப்பு

மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பயிற்சியாளர்கள் வீரர்களின் உடல் தகுதியை உறுதி செய்ய வேண்டும் என அவர் பேசி இருந்தார். தற்போது ரோகித் சர்மாவின் இந்த பேச்சு அவருக்கு வினையாக அமைந்துள்ளது. காரணம் யோ டெஸ்டில் தற்போது விராட் கோலி மனிஷ்பாண்டே, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் மட்டும்தான் தேர்ச்சி பெறுவார்கள். மற்றவர்கள் அனைவரும் யோயோ டெஸ்ட் தோல்வி அடைந்து விடுவார்கள்.

கடினம்

கடினம்

குறிப்பாக ரோகித் சர்மா, யோ யோ டெஸ்ட் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம். இதன் காரணமாக தான் 16.1 என்ற வினாடிகளில் கடக்க வேண்டும் என்பதை 16 புள்ளி 5 என பிசிசிஐ அதிகரித்துள்ளது. தற்போது ரோகித் சர்மாவுக்கு வயதும் அதிகமாகி விட்டதால் யோயோ டெஸ்டில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம். இதனால் ரோகித் சர்மா தனது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

யாருக்கு பாதிப்பு

யாருக்கு பாதிப்பு

யோ யோ டெஸ்ட் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டால் டெஸ்ட் அணியின் முக்கிய வீரராக விளங்கும் அஸ்வின் தோல்வியை தழுவ வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று குல்திப் யாதவ், முஹமது சமி, பும்ரா போன்ற பல முன்னணி வீரர்கள் யோயோ டெஸ்டில் தோல்வி அடைந்து விடுவார்கள். இதனால் இந்திய அணிக்கு தான் பின்னடைடவு ஏற்படும். இதேபோன்று தற்போது டெக்ஸா டெஸ்ட் என்று புதிய நடைமுறையும் கொண்டு வரப்பட உள்ளது.

 டெக்சா டெஸ்ட்

டெக்சா டெஸ்ட்

அதில் வீரர்களின் எலும்பு தன்மை எப்படி இருக்கிறது எலும்பின் அடர்த்தி எப்படி இருக்கிறது என்பது எக்ஸ்ரே மூலம் பரிசோதனை செய்யும் முறைதான் டெக்சா டெஸ்ட். இந்த இரண்டு முறையும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டால் 30 வயதுக்கு மேல் உள்ள வீரர்கள் அனைவரும் வெளியேற வேண்டிய நிலை தான் வரும். இந்த புதிய முறை வரும் தொடரிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, January 1, 2023, 23:03 [IST]
Other articles published on Jan 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+