முக்கிய வீரருக்கே காயம்.. 2வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு பின்னடைவு.. அடுத்தகட்ட முடிவு என்ன?
புனே: இலங்கை அணியுடனான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள சூழலில் இந்திய அணியில் முன்னணி வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது டி20 போட்டி இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு இந்த போட்டியானது தொடங்கும்.

பின்னடைவு
இந்நிலையில் இதற்கான அணி தேர்வு நடக்கும் போதில் தான் ஸ்டார் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அது வேறு யாரும் இல்லை சஞ்சு சாம்சன் தான். அனைத்து வீரர்களும் மும்பையில் இருந்து புனேவுக்கு வந்துவிட்ட சூழலில் சாம்சன் மட்டும் மும்பையிலேயே இருந்துவிட்டார். இதுகுறித்து விசாரிக்கையில், அவருக்கு கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் பிசியோதெரபிக்காக அங்கேயே இருந்துள்ளார்.

என்ன காயம்
முதல் போட்டியில் ஹர்திக் வீசிய முதல் ஓவரிலேயே சஞ்சு சாம்சனுக்கு கேட்ச் வந்தது. மிட் ஆஃப் திசையில் நின்றிருந்த அவர், டைவ் அடித்து கேட்ச் பிடிக்கும் போது கீழே விழுந்தார். எனினும் அப்போது எவ்வித பாதிப்பும் இல்லாதது போன்று களத்தில் தொடர்ந்து ஃபீல்டிங் செய்தார். ஆனால் போட்டி முடிந்தபிறகு தான் வலியை உணர்ந்து மருத்துவ உதவி கோரப்பட்டிருக்கிறது.

ரசிகர்கள் ஏமாற்றம்
பெரும் போராட்டங்களுக்கு பிறகு சஞ்சுவுக்கு தற்போதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் ஆட்டத்தில் அதனை சரியாக பயனபடுத்தவில்லை. பேட்டிங்கில் 6 பந்துகளை சந்தித்து வெறும் 5 ரன்களையே அடித்தார். இதே போல ஃபீல்டிங்கிலும் முக்கிய கேட்ச்-ஐ தவறவிட்டார். இப்படிபட்ட சூழலில் காயமும் உடன் சேர்ந்து வந்திருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மாற்று வீரர் யார்
சஞ்சு சாம்சன் அணியில் இல்லாததால், அவருக்கு மாற்று வீரராக ராகுல் திரிபாதி இந்திய ப்ளேயிங் 11ல் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது. சஞ்சு சாம்சனை போன்றே ஐபிஎல்-ல் பெரிய அனுபவம் உள்ள திரிபாதிக்கு இன்னும் இந்திய அணி வாய்ப்பே கிடைக்கவில்லை. இச்சூழலில் நீண்ட போராட்டத்திற்கு பின் இன்று அறிமுக போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications