Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போட்ட வீடியோ.. ரோகித் - பாண்ட்யா இடையே கிளம்பிய பூகம்பம்.. பிசிசிஐ என்ன செய்கிறது?

மும்பை: இந்திய அணியில் ரோகித் - ஹர்திக் பாண்ட்யா இடையே கேப்டன்சி பிரச்சினை எழுந்துள்ள சூழலில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி தற்போது வங்கதேசத்துடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அடுத்ததாக வரவுள்ள இலங்கை தொடரின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அந்த அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளது.

இலங்கை தொடர்

இலங்கை தொடர்

இரு அணிகளுக்கும் இடையே முதலில் டி20 தொடர் ஜனவரி 3, 5, 7ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜனவரி 10, 12, 15ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் சூழலில் இன்னும் இந்திய அணி வீரர்களை அறிவிக்கவில்லை. புதிய தேர்வுக்குழு இன்னும் நியமிக்கப்படாததால், சேட்டன் சர்மா தலைமையிலான குழுவே இதற்கும் வீரர்களை தேர்வு செய்கிறது.

திடீர் பரபரப்பு

திடீர் பரபரப்பு

இந்த தொடரில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. ஏனென்றால் இந்திய அணிக்கு தனி தனி கேப்டன்சி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ரோகித் சர்மாவின் வயதையும், பணிச்சுமையையும் மனதில் வைத்து, டி20 அணியை இனி ஹர்திக் பாண்ட்யாவிடம் ஒப்படைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த அபெக்ஸ் மீட்டிங்கிலும் அது விவாதிக்கப்பட்டு, இலங்கை தொடரில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

நீக்கப்பட்ட வீடியோ

நீக்கப்பட்ட வீடியோ

இந்நிலையில் இன்னும் அறிவிக்கப்படாமலேயே நேற்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தகவலை கசியவிட்டது. இலங்கை தொடருக்கான புரோமோ நேற்று வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவை வழிநடத்தப்போவதாக பாண்ட்யா அறிவிக்கப்பட்டிருந்தார். சான்றாக அவரே அதில் நடித்திருந்தார். இது ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியதை அடுத்து அந்த விளம்பரம் உடனடியாக நீக்கப்பட்டது.

ரோகித்தின் காயம்

ரோகித்தின் காயம்

ஒருபுறம் ரோகித் சர்மாவுக்கு காயம் இன்னும் சரியாகாததால் பாண்ட்யா வழிநடத்துவார் என கூறப்படுகிறது, மற்றொருபுறம் ஆண்டின் தொடக்கத்திலேயே இரட்டை கேப்டன்சி அமலாகிறது என தெரிகிறது. எனினும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மூலம் பாண்ட்யா கேப்டன் என்பது உறுதியாகியுள்ளது.

Story first published: Monday, December 26, 2022, 9:51 [IST]
Other articles published on Dec 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+