Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டென்னிஸ் டூ கிரிக்கெட்.. ஆர்சிபி அணியில் சானியா மிர்சா.. ஆச்சரியம் கொடுத்த பெங்களூரு அணி!

பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியின் மென்ட்டராக நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிசிசிஐ சாா்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் முதல்முறையாக மகளிா் பிரீமியா் லீக் போட்டியை நடத்த பிசிசிஐ தீா்மானித்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. நடப்பாண்டில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில் மகளிர் வீராங்கனைகளுக்கான ஏலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் 5 அணிகள் பங்கேற்றன.

ஆர்சிபி அணி

ஆர்சிபி அணி

இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஏலத்தை தொடங்கிய ஆர்சிபி அணி ரூ.3.4 கோடிக்கு ஸ்மிருதி மந்தனாவை பெங்களூரு அணி வாங்கியது. இவர் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல் ரவுண்டர் எல்லீஸ் பெர்ரி, நியூசிலாந்து அணியின் சோஃபி டெவின், இந்திய அணியின் ரேணுகா சிங் மற்றும் ரிச்சா கோஷ் என்று நட்சத்திர வீராங்கனைகளை ஆர்சிபி அணி வாரி குவித்தது. அதிலும் ஸ்மிருதி, எல்லீஸ் பெர்ரி, சோஃபி டெவின், ரேணுகா ஆகியோர் ஒரே அணியில் விளையாடுவது ஆர்சிபி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஆர்சிபி பயிற்சியாளர்

ஆர்சிபி பயிற்சியாளர்

அதுமட்டுமல்லாமல் பயிற்சியாளராக மகளிர் பிக் பாஷ் தொடரின் சிறந்த பயிற்சியாளர் என்று பெயரெடுத்த பென் சாவரை நியமித்துள்ளது. அதேபோல் பீல்டிங் பயிற்சியாளராக வனிதா ஆர், அணியின் மருத்துவராக ஹரிணி, தெரஃபிஸ்டாக நவ்நீதா கவுதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் பெங்களூரு அணியின் மென்ட்டராக நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை நியமித்து பலருக்கும் ஆச்சரியம் கொடுத்துள்ளது ஆர்சிபி நிர்வாகம்.

சானியா மிர்சா

சானியா மிர்சா

இரட்டையர் பிரிவில் ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்தியா டென்னிஸ் வீராங்கனையான சானியா, இந்த வார இறுதியில் துபாயில் நடைபெறவிருக்கும் WTA 1000 தொடருக்கு பிறகு தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தெரிகிறது. இந்த நிலையில்தான் அவர் பெங்களூரு அணியின் மென்ட்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சானியாவின் ரோல் என்ன?

சானியாவின் ரோல் என்ன?

இதுகுறித்து ஆர்சிபி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய மகளிர் விளையாட்டில் சானியா முன்னோடியாக அறியப்படுகிறார். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எதிகொள்கின்ற தடைகளை தகர்த்தவர். அவர் ஆர்சிபி அணியின் மென்ட்டராக நியமிப்பதில் பெருமை கொள்கிறோம்.

எங்கள் பயிற்சியாளர் குழு பயிற்சி சார்ந்த பணிகளை கையாளும். ஆனால், அழுத்தத்தின் போது வீராங்கனைகள் திறம்பட செயல்பட சானியாவின் வாழிகாட்டுதல் உதவும் என கருதுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, February 15, 2023, 21:05 [IST]
Other articles published on Feb 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+