Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கே.பி.எல். பார்க்கலாம்

பெங்களூரு: செப்டம்பர் 1ம் தேதி துவங்கும் கர்நாடகா பிரீமியர் லீக் சீசன் 6, களைகட்டப் போகிறது. இந்த ஆண்டு நடக்கும் போட்டிகளை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிப்பரப்ப உள்ளது.

கர்நாடகா பிரீமியர் லீக் போட்டிகள், 6வது ஆண்டாக நடைபெற உள்ளது. செப்டம்பர் 1 துவங்கி, 23ம் தேதி வரை, கர்நாடகாவின் பெங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளியில் போட்டிகள் நடக்க உள்ளன.

பெங்களூரு பிளாஸ்டர்ஸ், நடப்பு சம்பியன் பீஜபூர் புல்ஸ், பெலகாவி பாந்தர்ஸ், பெல்லாரி டஸ்கர்ஸ், ஹூப்ளி டைகர்ஸ், மைசூரு வாரியர்ஸ், நம்ம சிவமோகா என, மொத்தம் ஏழு அணிகள் போட்டியிடுகின்றன.

Star TV to telecast KPL


19 நாட்கள் போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டி, செப்டம்பர் 1ம் தேதி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு போட்டிகள் நடக்கும். முதல் போட்டி மாலை 3 மணிக்கும், அடுத்த போட்டி, இரவு 7 மணிக்கும் துவங்கும்.

கே.பி.எல்.,லில் புள்ளிப் பட்டியலில் முதல் மற்றும் நான்காம் இடத்தைப் பிடிக்கும் அணிகள், முதல் செமி பைனலில் மோதும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள், மற்றொரு செமி பைனில் மோதும்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, கே.பி.எல்., டி-20 போட்டிகளை மேலும் சுவாரசியமாக்கும் வகையில், நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன், கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட் எச்டி1 மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய சேனல்களில் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பாகும். முன்னாள் வீரர்கள் பிரெட் லீ, மைக்கேல் ஹசி, டேனிடல் வெட்டோரி, டீன் ஜோன்ஸ் ஆகியோர் மைக் பிடிக்கின்றனர்.

இவர்களுடன், கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி. வி.பி.சந்திரசேகர், கர்நாடக அணியின் முன்னாள் வீரர் பசல் கலீல், விளையாட்டு நிகழ்ச்சிகளை வழங்கும் சாரு சர்மா ஆகியோரும் போட்டிகளை நேரடியாக வர்ணனை செய்ய உள்ளனர்.

இதோ உங்களுக்கு மற்றொரு இனிப்பான செய்தி, மயந்தி லாங்கர், சஞ்சனா கணேசன் ஆகியோர், நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக இருப்பர்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, சியர் கேர்ள்ஸ் உண்டு. கே.பி.எல். போட்டிகளை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் வேண்டாம். டிவியை ஆன் பண்ணுங்க, என்ஜாய் பண்ணுங்க.




Story first published: Saturday, August 26, 2017, 19:41 [IST]
Other articles published on Aug 26, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+