ஐபிஎல் ஏலத்தில் அடுத்த தோனி, குட்டி கோலி, பேபி டிவில்லியர்ஸ்..!! கோடீஸ்வரனாக மாற உள்ள ஜூனியர்கள்..
பெங்களூரு: ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இறுதிப் பட்டியலில் 590 வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இந்த நிலையில் அண்டர் 19 தொடரில் விளையாடிய 10 வீரர்களுக்கு பிசிசிஐ சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
அதிரடி பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கள் 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான உலககோப்பை தொடரில் கலக்கியதால், அவர்களை எப்படியாவது ஏலத்தில் எடுக்க பல அணிகள் காத்துள்ளன
இதனால், இந்த இளம் நட்சத்திரங்கள் கோடி கணக்கில் ஏலத்தில் பணம் பெற உள்ளனர். இந்நிலையில், அவர்களின் அடிப்படை விலை என்ன என்பதை தற்போது காணலாம்.

யாஷ் துல்
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த விராட் கோலி என்று அழைக்கப்படம் யாஷ் துல் டெல்லியை சேர்ந்தவர். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக யாஷ் துல் ஆடிய ஆட்டம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. கடைசியாக இவர் கடைசியாக விளையாடி 8 போட்டியில் 4 அரைசதம், 1 சதம் அடித்துள்ளார். எதிர்காலத்தில் பெரிய வீரராக வரும் அனைத்து தகுதியும் உள்ள இவரது அடிப்படை விலை 20 லட்சம். ஆனால் கோடிகளை தாண்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ் பவா
அண்டர் 19 அணியின் அதிரடி இளம் வீரராக விளங்கும் ராஜ் பவா, பேட்டிங், பந்துவீச்சு என கலக்கினார். U19 உலகக் கோப்பையில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். நெருக்கடியான கட்டத்தில் பொறுப்புடனும் விளையாடுகிறார். இவரது அடிப்படை விலை 20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல கோடியை இவர் ஏலத்தில் பெறுவார்.

ராஜவர்த்தன் ஹங்கர்கேகர்
இந்திய அணியின் அடுத்த ஹர்திக் பாண்டியா என்று போற்றப்படும் ஹங்கர்கேகர் வேகப்பந்துவீச்சிலும், அதிரடி பேட்டிங்கிற்கும் பெயர் போனவர். கடந்த 8 போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 சிக்சர்களை விளாசி 39 ரன்கள் குவித்தார். இவரது அடிப்படை விலை 20 லட்சம் ரூபாய் ஆகும்.

விக்கி ஆஷ்ட்வால்
U-19 உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ள விக்கி ஆஷட்வால், 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஷ்ட்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஷ்ட்வால் அடிப்படை விலை 20 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரவிகுமார்
இந்திய U19 அணியில் இடம்பெற்றுள்ள இடதுகை வேகப்பந்துவிச்சாளர் ரவிகுமார், அரையிறுதி, இறுதிப் போட்டி என தனது பந்துவீச்சில் கலக்கினார். இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் குறைவு. இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது கொஞ்சம் கடினம் என்பதால், அனைத்து அணிகளும் யாரேனும் ஒரு இடதுகை வேகப்பந்துவிச்சாளர்களையாவது அணியில் சேர்த்துவிடுவார்கள். இதனால் ரவிகுமார் காட்டில் மழை தான்

டிவால்ட் பிரவீஸ்
U-19 உலகக் கோப்பையில் களமிறங்கி புகழ் பெற்றவர் தென்னாப்பிரிக்க வீரர் டிவால்ட் பிரவீஸ். ஏபி டிவில்லியர்ஸ் போல் அதிரடியாக ஆடும் இவர் மீது இப்போதே பல அணிகளின் கண்கள் உள்ளது. பிரவீஸ் தொடர் நாயகன் விருதை வென்றார். ஜூனியர் உலககோப்பையில் அதிக ரன்கள் விளாசியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். பிரவீசின் அடிப்படை விலை 20 லட்சமாகும்.
Recommended Video

தினேஷ் பானா
தோனி போல் அதிரடி ஆட்டம், தோனி போல் விக்கெட் கீப்பிங் என கலக்கிய தினேஷ் பானா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 4 பந்துகளில் 20 ரன்கள் அடித்தார். இறுதிப் போட்டியில்தோனி போல் சிக்சர் அடித்து உலககோப்பையை வென்று தந்தார். இவர் ஏலத்தில் தன் பெயரை பதிவு செய்யவில்லை.ஆனால் கடைசி நேரத்தில் தினேஷ் பானாவை பி.சி.சி.ஐ. ஏலத்தில் சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications