Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“முன்பு சஹார்.. தற்போது மற்றொருவர்”.. சிஎஸ்கேவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி.. சிக்கலில் சிக்கிய தோனி!

சென்னை: ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் வெளியேறிய நிலையில் சிஎஸ்கேவுக்கு மற்றொரு வீரரால் சிக்கல் உருவாகியுள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. அதன்படி வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29 வரை நடைபெறவிருக்கிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.

அதிர்ச்சியில் சிஎஸ்கே

அதிர்ச்சியில் சிஎஸ்கே

இதற்காக சிஎஸ்கே அணி சூரத்தில் இன்று முதல் தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாகவே சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி செய்தி வந்திருந்தது. அதாவது முன்னணி பவுலர் தீபக் சஹாருக்கு காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவு காரணமாக ஐபிஎல் தொடரின் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியானது. இதே போல ருதுராஜுக்கும் கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மற்றொரு வீரர்

மற்றொரு வீரர்

இந்த அதிர்ச்சியில் இருந்து சிஎஸ்கே அணி இன்னும் மீளாத நிலையில் தற்போது மற்றொரு வீரரும் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சஹார் விளையாடவில்லை என்றால் அந்த இடத்தில் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டுவைன் பிரிடோரியஸ் தான் விளையாடுவதாக இருந்தது. ஆனால் அவரும் முதல் பாதி ஆட்டங்களில் இருக்க மாட்டார் எனத் தெரிகிறது.

காரணம் என்ன

காரணம் என்ன

தென்னாப்பிரிக்க அணி அடுத்ததாக வங்கதேசத்துடன் ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் மார்ச் 18ல் தொடங்கி ஏப்ரல் 12 வரை நடைபெறவிருக்கிறது. இதில் இருந்து ரபாடா, நார்ட்ஜே போன்ற முக்கிய வீரர்கள் விலகிவிட்டு, ஐபிஎல்-ல் விளையாடப்போவதாக தெரிகிறது. அவர்களின் இடத்திற்கு பிரிடோரியஸ் தான் முக்கிய தேர்வாக இருக்கிறார். இதனால் அவர் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாடாமல் போகலாம்.

Recommended Video

IPL 2022 Auction: Chennai Super Kings SWOT Analysis | Aanee Cricket | OneIndia Tamil
தோனிக்கு வந்த சிக்கல்

தோனிக்கு வந்த சிக்கல்

ரபாடா, நார்ட்ஜே உள்ளிட்டோர் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியின் முதன்மை வீரர்கள். அவர்கள் தேசிய அணியை புறக்கணித்துவிட்டு வந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் பிரிட்டோரிஸுக்கு அணியில் தனது இடத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் நிச்சயம் அவர் வங்கதேச தொடரைதான் தேர்வு செய்வார் எனத் தெரிகிறது. இது தோனிக்கு மேலும் சிக்கலை உருவாக்கும்.

Story first published: Monday, March 7, 2022, 15:59 [IST]
Other articles published on Mar 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+