“அட இதை யாருமே கவனிக்கலையே?” சைலண்டாக ஒதுக்கப்பட்ட சீனியர் வீரர்.. ஒருநாள் அணி அறிவிப்பில் ட்விஸ்ட்
மும்பை: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் இருந்து சத்தமே இல்லாமல் சீனியர் வீரர் ஒருவர் கழட்டிவிடபட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்ததாக ஜனவரி 19ம் தேதி முதல் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. கேப்டன் ரோகித் சர்மாவின் உடற்தகுதிக்காக காத்திருந்த பிசிசிஐ ஒருவழியாக நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஒருநாள் தொடருக்கான அணி
அதன்படி ரோகித் சர்மாவின் உடல்நிலையில் சீராக ஆகாததால் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக கே.எல். ராகுலும், துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து மொத்தம் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

அணி விவரம்
இந்த பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் இருந்தன. இளம் வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் என களமிறக்கியுள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷிகர் தவான் போன்ற சீனியர் வீரர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் அணிக்கு திரும்புகின்றனர்.

சைலண்டாக ஒதுங்கிய வீரர்
இந்நிலையில் இந்த பட்டியலில் சத்தமே இல்லாமல் ஒரு முக்கிய வீரர் கழட்டிவிடப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டியில் 200வது விக்கெட்டை எடுத்து அசத்திய முகமது ஷமி தான் அது. சீனியர் வேகப்பந்து வீச்சாளரரான முகமது ஷமி-யின் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என்ன காரணம்
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் முகமது ஷமி விளையாடி வருவதால், அவருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்தி பிரஷித் கிருஷ்ணா, தீபக் சாஹர் போன்ற இளம் வீரர்களை களமிறக்கி பார்க்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பின்னடைவா?
முகமது ஷமி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார்.முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களும், 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்களும் என எடுத்து அசத்தினார். இந்த சூழலில் அவரை வெளியே உட்காரவைப்பது இந்திய அணிக்கு நல்லதா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications